“வட சென்னை மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் வி.எஸ்.பாபு” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகழஞ்சலி

இடது: வி.எஸ்.பாபு  | வலது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இடது: வி.எஸ்.பாபு  | வலது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கோப்புப் படங்கள்

Updated on:
1 min read

சென்னை: “வட சென்னையின் முகமாக இருந்தவர் மறைந்த கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு. அவரது மொழி வட சென்னையின் மொழி. கடினமான நேரங்களிலும் சிரித்த முகத்துடன் இருப்பார்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சென்னை மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார். அவரது மறைவு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறும்போது, “முதல்வர் விஜய்யின் அன்பையும், நம்பிக்கையும் பெற்றவர் மறைந்த கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு. அன்பானவர்; சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர். எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உயிர் பிரிந்தது.

தமிழக வெற்றி கழகத்தின் கடினமாக காலக்கட்டங்களில் எங்களுடனும், முதல்வருடனும் இணைந்து பணி செய்தவர். வட சென்னையின் முகமாக இருந்தவர் வி.எஸ்.பாபு. அவரது மொழி வட சென்னையின் மொழி. அது அன்பாலும், தைரியத்தாலும் நிறைந்தது.

கடினமான நேரங்களிலும் சிரித்த முகத்துடன் இருப்பார். என்னை அவரது மகனாகப் பார்த்தார். வட சென்னை மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். அவரின் இழப்பு ஒரு கட்சியின் இழப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சென்னையின் இழப்பு.

குடும்பத்துடன் தவெகவில் இணையும்போது, ‘சென்னையில் மக்கள் இன்னும் கஷ்டப்படுகிறார்கள்; குறிப்பாக வட சென்னையில் இன்னும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்’ என தவெக தலைவரிடம் சொன்னார்.

எப்பொழுதும் நாங்கள் அவரின் குடும்பத்துடன் அன்பாகவும் நேசமாகவும் இருப்போம். கனத்த இதயத்துடன், மூத்த உறுப்பினரின் இறப்பை பதிவு செய்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இடது: வி.எஸ்.பாபு  | வலது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

X