எம்ஜிஆரைப் போல கர்நாடகம் செல்வது முதல்வர் விஜய்க்கு பொருந்தாது: துரைமுருகன் கருத்து

துரைமுருகன் | கோப்புப்படம்

துரைமுருகன் | கோப்புப்படம்

Updated on
1 min read

வேலூர்: எம்​ஜிஆரை போல் முதல்​வர் விஜய் கர்​நாடகா சென்று பேசப்போகிறார் என்​பது இப்​போது பொருந்​தாது என முன்​னாள் நீர்​வளத் ​துறை அமைச்​சர் துரை​முரு​கன் தெரி​வித்​தார்.

வேலூர் காட்​பாடியில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் மேலும் கூறிய​தாவது: தமிழக முதல்​வர் எதற்​காக பெங்​களூரு போகிறார் என்​பதை இன்​னும் அவர் அறிக்கை​யாகவோ, செய்​தி​யாகவோ வெளி​யிட​வில்​லை. அனுமானத்​தில் அவருடைய அமைச்​சர்​கள் சொல்​வதை பார்த்து காவிரி பிரச்​சினைக்​காக என சொல்​கிறார்கள்.

காவிரி​யில் பிரச்​சினை குறித்து மேலாண்மைக் குழு, ஒழுங்காற்று குழு​விடம் முறையிடலாம். இரண்​டும் கேட்​க​வில்லை என்​றால் மத்​திய நதிநீர் ஆணை​யத்​திடம் சொல்ல வேண்​டும். இதைக்​கேட்க குழு​வுக்கு தான் அதி​காரம் உண்​டு. நீங்​களாகவே கர்​நாடகத்​திடம் கேட்​டால் நாம் வாங்​கிய உச்ச நீதி​மன்ற உத்​தரவு வீணாகப்போய்​விடும்.

கர்​நாடகா போவது குறித்து அனைத்துக் கட்சி கூட்​டத்தை கூட்டி ஆலோ​சித்​திருக்​கலாம். எம்​ஜிஆரை போல் முதல்​வர் விஜய்​யும் கர்​நாடகம் சென்று பேசப்​போகிறார் என்​கிறார்​கள். எம்​ஜிஆர் போனது நீதி​மன்​றத்​துக்கு நாம் போகாத நேரம். அப்​போது, நம்​மிடம் நீதி​மன்ற உத்​தரவு எது​வும் இல்​லை. இப்​போது, நம்​மிடம் நீதி​மன்ற உத்​தரவு உள்​ளது. ஆகை​யால், அதோடு இது பொருந்​தாது. பாஜக​விடம் நாங்​கள் நெருங்கவில்​லை. காங்​கிரஸை விட்டு நாங்​கள் வெளியே வந்துவிட்​டோம். இவ்​வாறு கூறினார்​.

<div class="paragraphs"><p>துரைமுருகன் | கோப்புப்படம்</p></div>
“பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் கடும் தாக்குதல்” - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in