மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,981 கனஅடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,981 கனஅடியாக சரிவு
Updated on
1 min read

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 3,981 கனஅடி​யாக சரிந்​துள்​ளது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 4,282 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 3,981 கனஅடி​யாக குறைந்​தது. அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி​யும், கால்​வாய் பாசனத்​துக்கு 400 கன அடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. மேட்​டூர் அணை நீர்​மட்​டம் 116.23 அடி​யாக​வும், நீர் இருப்பு 87.58 டிஎம்​சி​யாக​வும் உள்​ளது.ஒகேனக்​கல் காவிரி​யில் கடந்த 5-ம் தேதி காலை விநாடிக்கு 5,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து 7-ம் தேதி மாலை வரை 5,000 கனஅடி​யாகவே நீடித்​தது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் 6,000 கனஅடி​யாக உயர்ந்த நீர்​வரத்து நேற்று காலை 5,000 கனஅடி​யாக குறைந்​தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,981 கனஅடியாக சரிவு
திமுக நடவடிக்கை நீதிபதிகளை அச்சுறுத்துகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in