மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடியை எட்டியது

Mettur Dam

மேட்டூர் அணை

Updated on
1 min read

மேட்டூர் / தருமபுரி: தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியதால் உபரி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 7,833 கனஅடியாகவும், மாலை 7,298 கனஅடியாகவும் நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 80.47 அடியாகவும், நீர்இருப்பு 42.42 டிஎம்சி.யாகவும் உயர்ந்துள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 9,000 கனஅடியாக பதிவான நீர்வரத்து, நேற்று காலை காலை 11 மணியளவில் 6,500 கனஅடியாகக் குறைந்தது.

Mettur Dam
சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு: மாநகராட்சி நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in