டெல்டா பாசனத்துக்கு இன்று மேட்டூர் அணை திறப்பு: முதல் முறையாக முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்

நீர்மட்டம் 91.15 அடியாக உள்ள நிலையில் கடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.

நீர்மட்டம் 91.15 அடியாக உள்ள நிலையில் கடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.

Updated on
1 min read

மேட்டூர்: டெல்டா பாசனத்​துக்கு மேட்​டூர் அணை​யை முதல்​வர் விஜய் இன்று திறந்து வைக்கிறார்.

மேட்​டூர் அணை​யில் திறக்​கப்​படும் நீரைப் பயன்​படுத்தி 12 மாவட்​டங்​களில் 17.10 லட்சம் ஏக்​கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 20-க்​கும் மேற்​பட்ட மாவட்​டங்​களுக்கு குடிநீர் ஆதா​ர​மாக விளங்​கு​கிறது. குறு​வை, சம்​பா, தாளடி பரு​வங்​களில் நெல் சாகுபடி மேற்​கொள்​வதற்கு உதவி​யாக ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்​களுக்கு மொத்​தம் 330 டிஎம்சி நீர் தேவைப்​படும். நடப்​பாண்​டில் அணை​யில் போது​மான நீர்​இருப்பு இல்​லாததால் தண்​ணீர் திறக்க முடிய​வில்​லை.

கேரளா, கர்​நாடகா காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் பெய்து வரும் மழை​யால் அங்​குள்ள அணை​களுக்கு நீர்​வத்து அதி​கரித்தது. பின்​னர், கபினி, கேஆர்​எஸ் அணை​களி​லிருந்து உபரிநீர் திறப்​பால், மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது. அணை​யின் நீர்​மட்​டம் 91 அடியை எட்​டி​யுள்ள நிலை​யில், இன்று (1-ம் தேதி) முதல் 45 நாட்​களுக்கு நீர் திறக்கப்படவுள்ளது.இதன்படி முதல்​வர் விஜய் முதல் முறை​யாக தண்​ணீர் திறந்து வைக்​கிறார்.

டெல்டா பாசன நீர் திறப்​புக்கு உரிய நாளான ஜூன் 12-ம் தேதி 20 முறை​யும், ஜூன் மாதத்​துக்கு முன்​பாக 11 முறை​யும் திறக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணை​யின் 93 ஆண்டு கால வரலாற்​றில், கால​தாமத​மாக 62-வது முறை​யாக இன்று பாசனத்​துக்கு தண்​ணீர் திறந்து வைக்​கப்​படு​கிறது. அணை​யில் 85 முதல் 90 அடி வரை தண்​ணீர் இருக்​கும் போது 8 முறை திறக்​கப்​பட்​டுள்​ளது.

டெல்டா பாசனத்​துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை முழு​மை​யாக 29 முறை திறக்​கப்​பட்​டுள்​ளது. செப்​டம்​பர் மாதத்​தில் தண்​ணீர் திறப்​பது இது 4-வது முறை​யாகும். இதனிடையே அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 10,485 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, மாலை​யில் 11,501 கன அடி​யாக உயர்ந்தது. 2,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வருகிறது. நீர்​மட்​டம் 91.15 அடி​யாக உள்ளது.

<div class="paragraphs"><p>நீர்மட்டம் 91.15 அடியாக உள்ள நிலையில் கடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை. </p></div>
காஞ்சியில் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா, கோவையில் டிஜிட்டல் நிதி மையம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in