மேட்டூருக்கு நீர்வரத்து 2,250 கனஅடியாக சரிவு

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

Updated on
1 min read

மேட்​டூர்​ / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 2,250 கனஅடி​யாக சரிந்​துள்​ளது.

அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 3,718 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை 2,958 கனஅடி​யாக​வும், மாலை 2,250 கனஅடி​யாக​வும் சரிந்​தது. அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 12,000 கனஅடி தண்​ணீரும், கால்​வாய் பகு​தி​களின் குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 400 கனஅடி தண்​ணீரும் திறந்து விடப்​படு​கிறது. அணை​யின் நீர்​மட்​டம் 90.52 அடி​யாக​வும், நீர் இருப்பு 53.24 டி.எம்​.சி.​யாக​வும் இருந்​தது.

இதற்​கிடையே தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்​று​முன்​தினம் காலை விநாடிக்கு 5,000 கன அடி​யாகப் பதி​வான நீர்​வரத்​து, நேற்று காலை 6 மணி​யள​வில்​ 3,000 கனஅடி​யாகக் குறைந்​தது.

<div class="paragraphs"><p>மேட்டூர் அணை </p></div>
ஏமன் துறைமுகத்தை கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்: செங்கடலில் பதற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in