பூந்தமல்லி - வடபழனி இடையே 10 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்

பூந்தமல்லி - வடபழனி இடையே 10 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்
Updated on: 
1 min read

சென்னை: பூந்​தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இன்று தொடங்க உள்ள நிலை​யில் நெரிசலான நேரங்​களில் 10 நிமிடத்​துக்கு ஒரு ரயில் இயக்​கப்​படும் என மெட்ரோ நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்​டுள்ள செய்தி குறிப்பு: பூந்​தமல்லி புறவழிச்​சாலை முதல் வடபழனி வரையி​லான 15 கிமீ வழித்​தடத்தில் பயணி​கள் சேவை இன்று முதல் தொடங்​கப்​படு​கிறது. இன்று மாலை 4 மணிமுதல் இரவு 9 மணி வரை ரயில் இயக்​கப்​படும். அதனைத்தொடர்ந்​து, நாளை முதல் தினசரி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சேவை​கள் வழங்​கப்​படும்.

இதில், திங்​கட்​கிழமை முதல் சனிக்​கிழமை வரையி​லான நாட்​களில், கூட்ட நெரிசலான நேரமான காலை 8 முதல் 11 மணி வரை​யிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை​யிலும் ஒவ்​வொரு 10 நிமிட இடைவெளி​யில் ரயில்​கள் இயக்​கப்​படும். மற்ற நேரங்​களில் 15 நிமிட இடைவெளி​யில் ரயில்​கள் இயக்கப்​படும்.

ஞாயிற்​றுக்​கிழமை மற்​றும் பொது விடு​முறை நாட்​களில் நெரிசல் நேரச் சேவை​கள் இருக்​காது. அந்​நாட்​களில் 15 நிமிட இடைவெளி​யில் ரயில்கள் இயக்கப்​படும். கட்​ட​ண​மாக குறைந்தபட்​சம் ரூ.10-ம் அதி​கபட்​ச​மாக ரூ.40 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

பூந்தமல்லி - வடபழனி இடையே 10 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்
முதல்வர் விஜய் அக்.13-ல் ஆந்திரா பயணம்: நதிநீர் விவகாரம் தொடர்பாக சந்திரபாபுவை சந்தித்து பேச திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in