மேல்மா சிப்காட் நில எடுப்பு அறிவிப்பு வாபஸ்: தொடர் எதிர்ப்பால் தமிழக அரசு நடவடிக்கை

மேல்மா சிப்காட் நில எடுப்பு அறிவிப்பு வாபஸ்: தொடர் எதிர்ப்பால் தமிழக அரசு நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: மேல்மா கிரா​மத்​தில் சிப்​காட் தொழிற் பூங்கா​வுக்​காக நிலம் கையகப்​படுத்​தும் அறி​விப்​பை, கடும் எதிர்ப்​பு​களால் தமிழக அரசு திரும்​பப் பெற்​றுள்​ளது.

தமி​ழ​கத்​தில் என்​எல்சி விரி​வாக்​கம் உட்பட பல்​வேறு முக்​கி​யத் திட்​டங்​களுக்​காக நிலங்​களை கையகப்​படுத்​து​வது தொடர்​பான அரசிதழ் அறிவிக்​கை​களை நில நிர்​வாக ஆணை​யர் ராஜேஷ் லக்​கானி சமீபத்​தில் வெளி​யிட்​டிருந்​தார்.

அதன்​படி, திரு​வண்​ணா​மலை மாவட்​டம், செய்​யாறு வட்​டம் மேல்மா கிரா​மத்​தில் சிப்​காட் தொழிற்​பூங்கா நிலை-3 அமைப்​ப​தற்​காக 22.16 ஹெக்​டேர் நிலம் கையகப்​படுத்​தப்​படும். இதற்​கான இழப்​பீட்​டுத் தொகை சிப்​காட் மூல​மாக வழங்​கப்​படும் என்று கடந்த செப்.1-ம் தேதி வெளி​யிடப்​பட்ட அறிவிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதற்கு கடும் எதிர்ப்​பு​கள் ஏற்​பட்​டதால் நிலம் கையகப்​படுத்​தும் அறி​விப்பை தமிழக அரசு திரும்​பப் பெற்​றது. இதுதொடர்​பாக சிப்​காட் மேலாண்மை இயக்​குநர் சி.அ.​ரா​மன் வெளி​யிட்ட அறிவிக்​கை​யில், “திரு​வண்​ணா​மலை மாவட்ட ஆட்​சி​யரின் பரிந்​துரையின்படி, மேல்மா கிரா​மத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வதற்​காக வெளி​யிடப்​பட்ட அறிவிக்கை திரும்​பப் பெறப்​படு​கிறது” என்று கூறப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் மேல்மா கிரா​மத்​தில் நில எடுப்பு கைவிடப்​பட்​டுள்​ளது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மேல்மா சிப்காட் நில எடுப்பு அறிவிப்பு வாபஸ்: தொடர் எதிர்ப்பால் தமிழக அரசு நடவடிக்கை
ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்கிறார் முதல்வர் விஜய்: உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in