மீனாட்சி அம்மன் கோயில் சீரமைப்பு பணிகள் செப்.10-ல் நிறைவடையும்

மீனாட்சி அம்மன் கோயில் சீரமைப்பு பணிகள் செப்.10-ல் நிறைவடையும்
Updated on
1 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் சீரமைப்​புப் பணி​கள் செப்​.10-ல் நிறைவடை​யும். செப்​.17-ல் திட்​ட​மிட்​டபடி குட​முழுக்கு நடை​பெறும் என உயர் நீதி​மன்​றத்​தில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் மற்​றும் உபகோ​யில்களின் சொத்​துகளை மீட்​க​வும், மீனாட்சி அம்​மன் கோயிலை சீரமைத்து விரை​வில் குட​முழுக்கு நடத்தவும் உத்​தர​விடக் கோரி​ சேலத்​தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக்​கல் செய்தார்.இந்த மனு நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேல் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அரசுத் தரப்​பில், மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் தீ விபத்​தால் பாதிக்​கப்​பட்ட வீர​வசந்​த​ராயர் மண்​டபம் சீரமைப்பு பணி​கள் நிறைவடை​யும் நிலை​யில் உள்ளன. புதிய நவீன சமையலறை பணி​களும் தொடங்​கியுள்​ளன. இப்​பணிகள் செப்​.10-க்​குள் நிறைவடை​யும். 17-ல் குட​முழுக்கு நடைபெறும். ஆக்​கிரமிப்​புகளை அகற்​றும் பணி நடக்கிறது எனக் கூறப்பட்டது. பின்​னர், விசா​ரணையை ஜூலை 29-ம் தேதிக்கு நீதிப​தி​கள் தள்ளிவைத்​தனர்​.

மீனாட்சி அம்மன் கோயில் சீரமைப்பு பணிகள் செப்.10-ல் நிறைவடையும்
டெல்லியை அதிரவைத்த சிஜேபி போராட்டம்... ‘இறங்கி’ வரும் மத்திய அரசு... - நடந்தது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in