அனைத்து பல்கலைக்கழகங்களிலும் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை

உயர்கல்வி அமைச்சர் ஆலோசனை
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: மாநில பல்கலைக்கழகங்களின் பதி​வாளர்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் உயர்​கல்வி அமைச்​சர் பி.விஸ்​வ​நாதன் தலை​மை​யில் நடந்​தது. இக்​கூட்​டத்​தில் உயர்​கல்​வித் துறை செயலர் தீரஜ்கு​மார், மாநில உயர்​கல்வி மன்ற துணைத் தலை​வர் எம்​.பி.​விஜயகு​மார், பல்​கலைக்​கழகங்​களின் பதி​வாளர்​கள் கலந்​து​கொண்​டனர்.

இக்​கூட்​டத்​தில், உயர் கல்வி நிறு​வனங்​களின் நிர்​வாகத்​திறனை மேம்​படுத்​து​வது, உயர்​கல்வி தரத்தை உயர்த்​து​வது, பல்​கலைக்​கழகங்​களில் ஆசிரியர் மற்​றும் ஆசிரியர் அல்​லாத பணி​யிடங்​களை​யும், பதி​வாளர், தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் பணி​யிடங்​களை​யும் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுப்​பது குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது.

மேலும், பாடத்​திட்ட குழுக்​களை உரிய காலத்​தில் மறுசீரமைப்பு செய்​வது, விளைவு அடிப்​படையி​லான கல்​வி​முறை, செமஸ்​டர் தேர்​வு​களை குறிப்​பிட்ட காலத்​தில் நடத்தி தேர்வு முடிவு​களை விரைந்து வெளி​யிடு​வது, மாணவர்​களுக்​கான கல்​விச் சேவை​களை இணை​ய​வழி​யில் விரிவுபடுத்​துவது, ஆய்​வகம் மற்​றும் வளாக உள்​கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​து​வது குறித்​தும் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது.

இக்​கூட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை ஐஜி கே.ப​வானீஸ்​வரி, உயர்​கல்வி நிறு​வனங்​களில் பயிலும் மாணவி​களின் பாது​காப்பு நடவடிக்​கையை மேம்​படுத்​து​வது தொடர்​பாக பதி​வாளர்​களிடையே உரை​யாற்​றி​னார்.

பெண்​களின் பாது​காப்​புக்​காக உரு​வாக்​கப்​பட்​டுள்ள காவல் உதவி செயலி​யின் அவசர​கால உதவி, பாது​காப்பு அம்​சங்​கள், அதன் பயன்​பாடு​கள் குறித்து மாணவி​களிடையே விழிப்​புணர்வு ஏற்​படுத்​து​மாறு கேட்​டுக்​கொண்​டார்.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை
ஜோதிட நாள்காட்டி 28.07.2026 | ஆடி 12 - செவ்வாய்க்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in