சிபிஐ மாநில தலைமை அலுவலகத்தில் மே தின கொண்டாட்டம்

சிபிஐ மாநில தலைமை அலுவலகத்தில் மே தின கொண்டாட்டம்
Updated on
1 min read

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இன்று மே தினம் கொண்டாடப்பட்டது.

இது குறித்து, அக்கட்சியின் அலுவலகச் செயலாளர் எம்.ஆர்.ரகுநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "மே தினத்தை முன்னிட்டு இன்று (01.05.2026 ) காலை சென்னை, தியாகராயர் நகரில், உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகமான “பாலன் இல்லத்தில்” மே தின விழா மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி தலைமை தாங்கினார். கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மே தினத்தை முன்னிட்டு கட்சியின் செங்கொடியை ஏற்றி வைத்தார்.

இதில் மாநில துணைச் செயலாளர் என்.பெரியசாமி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் வகிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திர நாத், தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ மாநில தலைமை அலுவலகத்தில் மே தின கொண்டாட்டம்
“தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுகவின் சித்து விளையாட்டுகளே”: அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in