

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்டியல் ஏந்தி தேர்தல் நிதி வசூலித்தனர்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்டியல் ஏந்தி தேர்தல் நிதி வசூலிக்கும் நிகழ்வு, சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று நிதி வசூலிப்பை தொடங்கி வைத்தார். அப்போது சாலை யோரங்களில் உள்ள கடைகள். பொதுமக் களிடம் உண்டியல் ஏந்தி தேர்தல் நிதி வசூலிலும் அவர் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு முழுவதும் செயல்படுவதற்கான நிதியை, எந்தப் பகுதி மக்களுக்காக நாங்கள் பாடுபடுகிறோமோ, அவர்களிடம் இருந்தே பெற்று செயல்படுவது எங்களது நீண்டகால அணுகுமுறை.
நீதிமன்றத்தின் மூலம் திமுகவின் ஊழலை வெளிப்படுத்துவோம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகிறார். 'பிஎம் கேர் நிதி' என்ற பெய ரில் பொதுமக்களிடம் இருந்து இந்திய அரசாங்கத்தின் இலட்சினையைப் பயன் படுத்தி வசூலித்த தொகையை, தனது சொந்த பணம் என்றும், அதற்கு கணக்கு காட்டத் தேவையில்லை என்றும் சொல்லி, பகிரங்கமாக மோசடியை செய்த கட்சியின் தலைவருக்கு தமிழகத்தைப் பற்றியோ, தமிழகத்தின் நிலையைப் பற்றியோ பேசுவதற்கு அருகதையில்லை.
தேமுதிக இணைந்த பின் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வலுப்பட்டிருக்கிறதே தவிர, பலவீனம் அடைய வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.