ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆஜர்

ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆஜர்
Updated on
1 min read

ராணிப்​பேட்டை: ராணிப்​பேட்டை மாவட்​டம் ஆற்​காடு ஜெக​நாத சாமி கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர் ரமேஷ் (34). இவர் 2016-ல் காணா​மல் போன​தாக போலீ​ஸில் புகார் அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், கேரள மாநிலத்​தில் 10-க்​கும் மேற்​பட்ட மாவோயிஸ்ட்கள், அம்​மாநில முதல்​வர் முன்​னிலை​யில் சரணடைந்​தனர். தேடப்​பட்டு வந்த ரமேஷும் அந்த கும்​பலில் இருந்​தார்.

பின்​னர் ரமேஷ் உள்​ளிட்ட அனை​வரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், வழக்கு விசா​ரணைக்​காக க்யூ பிரிவு போலீ​ஸார் ராணிப்​பேட்டை நீதி​மன்​றத்​துக்கு ரமேஷை நேற்று பலத்த பாது​காப்​புடன் அழைத்து வந்​தனர்.

பின்​னர், நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட ரமேஷை 5 நாட்​கள் காவலில் வைத்து விசா​ரிக்க போலீ​ஸாருக்கு அனு​மதி வழங்கி மாவட்ட முதன்மை நீதிபதி செல்​வம் உத்​தர​விட்​டார்.

தொடர்ந்​து, தீவிர​வாத மற்​றும் உள்​நாட்டு பாது​காப்பு அச்​சுறுத்​தல் கண்​காணிப்​புப் பிரிவு போலீ​ஸார் ரமேஷை விசா​ரணைக்​காக அழைத்​துச்​சென்​றனர்​.

ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆஜர்
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியே எடுக்கப்படும் அத்திவரதர் சிலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in