ரூ.6,750 சிறப்பு ஓய்வூதியம் வழங்க சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் வேண்டுகோள்

ரூ.6,750 சிறப்பு ஓய்வூதியம் வழங்க சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் வேண்டுகோள்
Updated on: 
1 min read

விருதுநகர்: தேசிய மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என விருதுநகரில் நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு விருதுநகரில் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டில், வருவாய் கிராம உதவியாளருக்கு இணையாக ரூ.6,750 சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், வருவாய் கிராம ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி வழங்க வேண்டும், மருத்துவப்படி ரூ.300 வழங்க வேண்டும், தேசிய மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், 10, 20, 30 ஆண்டு பணி புரிந்தமைக்கான ஊக்க ஊதியம் நிலுவை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரூ.6,750 சிறப்பு ஓய்வூதியம் வழங்க சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் வேண்டுகோள்
மண்டபம் அருகே 120 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் - கடலோர காவல்படை நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in