

மாணிக்கம் தாகூர் எம்.பி
மதுரை: அதிமுகவை அழிவின் பாதைக்கு தள்ளியவர் டிடிவி தினகரன் என, காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. விமர்சித்தார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முக்கிய காலகட்டத்தில் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் எனும் நோக்கமே எங்களது செயல் திட்டமாக இருக்கும். தமிழக அரசின் வெற்றி, செயல்பாடுகள் மக்களை முதன்மையாகக் கொண்ட அரசியலாகும்.
ராமர் கோயில் உண்டியல் திருட்டு பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவோம். மேகேதாட்டு அணை மத்திய அரசு அனுமதி இன்றியும், தமிழக அரசின் ஒத்துழைப்பு இன்றியும் அமைக்க முடியாது. அதிமுகவை ஒன்றுமில்லாமல் ஆக்கிய பொறுப்பு டிடிவி தினகரனையே சேரும். அதிமுகவை அழிவின் பாதைக்கு தள்ளியவர் அவர்தான். முதலில் அவர் அதிமுகவை ஒருங்கிணைக்கட்டும். பின்னர் திமுக, அதிமுக போன்ற பிற கட்சிகளை ஒருங்கிணைப்பதை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.