தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் எட்டப்பர்கள் யார்? - ராகுல் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் விளக்கம்

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் எட்டப்பர்கள் யார்? - ராகுல் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: தொகுதி மறு​வரையறை மசோ​தாவை ஆதரித்து வாக்​களிக்​கப் போகும் கட்​சிகளைத்​தான் ராகுல் காந்தி `எட்​டப்​பர்​கள்' என்று கூறிய​தாக தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் விளக்​கம் அளித்​துள்​ளார்.

சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் அவர் நேற்று செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: மக்​களவை​யில் இந்த வாரம் தொகுதி மறு​வரையறை மசோ​தாவை கொண்​டுவர பாஜக திட்​ட​மிட்​டுள்​ளது.

ஏற்​கெனவே கடந்த ஏப்​.17-ம் தேதி தோற்​கடித்த மசோ​தாவை பிரதமர் மோடி அரசு மீண்​டும் கொண்​டுவர திரை மறை​வில் பல்​வேறு வேலைகளை செய்து வரு​கிறது.

தொகுதி மறு​வரையறை என்​பது தமிழகத்​துக்​கும், தமிழக மக்​களுக்​கும் எதி​ரானது. கடந்த ஏப்​ரல் 17-ம் தேதி மக்​களவையில் நடை​பெற்ற வாக்​கெடுப்​பில் எதிர்க்​கட்​சிகள் அனை​வரும் சேர்ந்து எப்​படி தோற்​கடித்​தோமோ, அதைப்​போல தோற்​கடிப்​ப​தற்​கான முழு முயற்​சி​யும் மேற்கொள்வோம்.

கடந்த ஏப்​.17-ம் தேதி மக்​களவை​யில் கொண்​டு​வரப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோதா தோற்​கடிக்​கப்​பட்ட போது யார் பட்​டாசு வெடித்​தார்​களோ, யார் நகலை கிழித்​தார்​களோ, அவர்​களை அனை​வருக்​கும் தெரி​யும். இப்​போது அ​வர்​களின் மனநிலை மாறாது என நம்​பு​கிறேன்.

ஏற்​கெனவே தொகுதி மறு​வரையறைக்கு பாஜக, பாமக, அதி​முக ஆகிய கட்​சிகள்தான் ஆதர​வளித்​தன. இவர்​களோடு யார் சேரப் போகிறார்​கள் என்​பது இதற்கு பிறகுதான் தெரியவரும்.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தொகுதி மறு​வரையறை மசோ​தாவை யார் ஆதரித்து வாக்​களிப்​பார்​களோ அவர்​களை `எட்​டப்​பர்​கள்' என குறிப்​பிட்​டார்.

அந்த பட்​டியலில் முதலில் பாமக​வும், தொடர்ந்து அதி​முக, பாஜக ஆகியவையும் உள்​ளன. தமிழகத்​துக்கு நீர் வர வேண்​டும். அதற்​காக கர்​நாடக முதல்​வருடன் தமிழக முதல்​வர் பேச்​சு​ வார்த்தை நடத்த நினைத்​தால் அது சரி​தான். கர்​நாடகத்​தில் தண்​ணீர் கொடுக்​கக் கூடாது என அனைத்து அரசி​யல்​வா​தி​களும் ஒன்​றாக நிற்​கிறார்​கள்.

ஆனால் தமிழகத்​தில் ஒரு​வரை மாற்றி ஒரு​வர் குறை கூறி வரு​கின்​றனர். தமிழகத்​தில் தண்​ணீரை விட அரசி​யல்தான்​ முக்​கிய​மாக இருக்​கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் எட்டப்பர்கள் யார்? - ராகுல் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் விளக்கம்
காவிரி பிரச்சினையில் அரசுக்கு ஆதரவு அளிக்க அனைத்து கட்சிகளும் தயார்: முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in