சென்னை | போலீஸ் என மிரட்டி மூதாட்டியிடம் பணம் பறித்த நபர் கைது

சென்னை | போலீஸ் என மிரட்டி மூதாட்டியிடம் பணம் பறித்த நபர் கைது
Updated on
1 min read

சென்னை: மூ​தாட்​டி​யிடம் போலீஸ் என மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்​யப்​பட்​டார். புளியந்​தோப்​பு, திரு.​வி.க. நகர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் பட்​டம்​மாள் (70). சென்னை துறை​முகத்​தில் சுமார் 30 வருடங்​களாக துப்​புரவுப் பணி செய்து வரு​கிறார்.

இவர் கடந்த 30-ம் தேதி மாலை துறை​முகத்​தில் கொடுத்த 15 நாட்​கள் சம்பள பணத்​துடன், தனது பணம் சேர்த்து ரூ.11 ஆயிரத்தை சுருக்​குப்​பை​யில் வைத்​து, அதை துணி​களு​டன் ஒரு பையில் வைத்து எடுத்​துக் கொண்டு 7-வது நுழைவு வாயில் வழி​யாக வெளியே வந்து வீட்​டுக்கு செல்​வதற்​காக நடந்து சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது, அங்கு வந்த நபர் ஒரு​வர் பட்​டம்​மாளை மடக்​கி, தன்னை போலீஸ் என அறி​முகம் செய்து கொண்​டார். மேலும், மூதாட்​டி​யிடம் நீங்​கள் போதைப் பொருள் கடத்​தல் கும்​பலைச் சேர்ந்​தவர் என சந்​தேக​மாக உள்​ளது.

எனவே, உங்​களது உடைமை​களை சோதனை செய்ய வேண்​டும் எனக் கூறி மூதாட்​டி​யின் பையை வாங்கி சோதனை செய்​தார். அப்​போது, அதற்​குள் இருந்த ரூ.11 ஆயிரத்தை எடுத்​துக் கொண்​டு, அந்த பணத்தை காவல் நிலை​யத்​தில் வந்து பெற்​றுச் செல்​லு​மாறு கூறி விட்டு அந்த நபர் தப்​பிச் சென்​றார்.

அதிர்ச்சி அடைந்த மூதாட்​டி, துறை​முகம் காவல் நிலை​யம் சென்று நடந்த சம்​பவம் குறித்து தெரி​வித்​தார். அதன் பிறகு​தான் வந்​தது போலீஸ் அல்ல, வழிப்​பறி கொள்​ளை​யன் என்​பது தெரிந்​தது.

இந்த விவ​காரம் தொடர்​பாக, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​த​தில், மூதாட்​டி​யிடம் பணம் பறித்​தது மண்​ணடி அங்​கப்​பன் தெரு​வைச் சேர்ந்த வீரா​சாமி (40) என்​பது தெரிந்​தது. இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த அந்த நபரை போலீ​ஸார் நேற்​று​ முன்​தினம் கைது செய்​து சிறை​யில்​ அடைத்​தனர்​.

சென்னை | போலீஸ் என மிரட்டி மூதாட்டியிடம் பணம் பறித்த நபர் கைது
சவுக்கு சங்கர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in