மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்: செப். 24, 26 தேதிகளில் பழனிசாமி பிரச்சாரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

சென்னை: மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்காக செப்டம்பர் 24 மற்றும் 26ம் தேதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுராந்தகம் தொகுதியில் 24.9.2026, 26.9.2026 ஆகிய தேதிகளில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

செப்டம்பர் 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாமண்டூர், மாலை 4.30 மணிக்கு பூதூர், மாலை 6 மணிக்கு தேவத்தூர், இரவு 7 மணிக்கு சரவம் பாக்கம் ஆகிய இடங்களிலும்,

செப்டம்பர் 26ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு எல்.எண்டத்தூர், மாலை 4.30 மணிக்கு ராமாபுரம், மாலை 6 மணிக்கு எலப்பாக்கம், இரவு 7 மணிக்கு ஒரத்தி ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்.

சுற்றுப் பயணத் திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், சிறப்பான முறையில் செய்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
‘பத்​தா’ பட நிகழ்வில் முதல்வர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in