குடியரசு துணைத் தலைவர் வந்தபோது மின் தடை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்

குடியரசு துணைத் தலைவர் வந்தபோது மின் தடை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்
Updated on: 
1 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அக்.30-ல் குடியரசுத் துணைத் தலைவர் வந்தபோது ஏற்பட்ட மின்தடை தொடர்பாக கோயில் இளநிலை பொறியாளர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.30-ம் தேதி மாலை 5.30 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்வதற்காக வந்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர், அம்மன் சந்நிதி வாசல் முன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கோயிலுக்குள் ஜெனரேட்டர் மூலம் கொடுக்கப்பட்ட மின் விநியோகத்தை, மின்சாரத் துறையின் மின் இணைப்புக்கு மாற்றியபோது 2 முறை மின்தடை ஏற்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்கு முதல் நாள், அக்.29-ம் தேதி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமி வந்தபோதும் மின் தடை ஏற்பட்டது. இதுபோன்று தொடர் சர்ச்சை காரணமாக எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியபோது மின்தடைக்கு கோயில் நிர்வாகமே பொறுப்பு, தமிழ்நாடு மின் வாரியம் அல்ல.

குடியரசுத் துணைத் தலைவர் கோயிலிலிருந்து வெளியே சென்று விட்டார் என நினைத்து கோயிலுக்குள் ‘பவர் ஹவுஸ்’சில் மின் இணைப்பு மாற்றும்போது ஏற்பட்ட மின்தடை எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை, நேற்று முன்தினம் இரவில் மின்வெட்டு தொடர்பாக கோயில் இளநிலை மின் பொறியாளர் ஜானகிராமனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அறங்காவலர் குழு ஒப்புதலுக்கும் அனுப்பி உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

குடியரசு துணைத் தலைவர் வந்தபோது மின் தடை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்
"ஞானேஷ் குமாருக்கு சிறை உறுதி" - இண்டியா கூட்டணி பொது கூட்டத்தில் ராகுல் திட்டவட்டம்

X