மதுரை: அரசு வழக்கறிஞர்களாக பொறுப்பேற்க வந்தோருக்கு அனுமதி மறுப்பு

சமூக வலைதளங்களில் பெயர் பட்டியல் வெளியீடு
மதுரை: அரசு வழக்கறிஞர்களாக பொறுப்பேற்க வந்தோருக்கு அனுமதி மறுப்பு
Updated on
1 min read

மதுரை: உயர் நீதி​மன்ற அரசு வழக்​கறிஞர்​கள் நியமனம் தொடர்​பாக சமூக வலைதளங்​களில் வெளி​யான பட்​டியலில் இடம்​பெற்ற வழக்​கறிஞர்​கள் பொறுப்பேற்​கச் சென்​ற​போது, அவர்​களிடம் அரசாணை இல்​லாத​தால் திருப்பி அனுப்​பப்​பட்​டனர்.

தமிழகத்​தில் தவெக ஆட்​சிக்கு வந்​ததும் சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் முந்​தைய திமுக ஆட்​சி​யின்​போது நியமிக்​கப்​பட்ட அரசு வழக்​கறிஞர்​கள் பதவி வில​கினர்.

இதையடுத்து தலைமை அரசு வழக்​கறிஞர், தலை​மைக் குற்​ற​வியல் அரசு வழக்​கறிஞர், 2 கூடு​தல் அரசு தலைமை வழக்​கறிஞர்​கள் மற்​றும் சென்னை உயர் நீதி​மன்ற, மதுரை அமர்​வுக்கு தற்​காலிக அரசு வழக்​கறிஞர்​கள் நியமிக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில் ஞாயிற்​றுக்​கிழமை சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் மதுரை அமர்வு அரசு வழக்​கறிஞர் நியமனம் தொடர்​பான தகவல்​கள் சமூக வலை தளங்​களில் பரவின. அந்​தத் தகவல்​களில் மதுரை அமர்​வுக்கு சிவில் பிரி​வில் 24 அரசு வழக்​கறிஞர்​கள், குற்​ற​வியல் பிரி​வில் 17 அரசு வழக்​கறிஞர்​கள் நியமிக்​கப்​பட்​டிருப்​ப​தாகக் கூறி வழக்​கறிஞர்​களின் பெயர்​களும் இடம் பெற்​றிருந்​தன.

வழக்​க​மாக அரசு வழக்​கறிஞர்​கள் நியமிக்​கப்​பட்​டால் அரசாணை பிறப்​பிக்​கப்​படும். வழக்​க​மான அரசாணை இல்​லாமல் அரசு வழக்​கறிஞர்​கள் நியமனம் தொடர்​பாக சமூக வலைதளங்​களில் பரவிய தகவல் வழக்​கறிஞர்​கள் மத்​தி​யில் குழப்​பத்தை ஏற்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில் சமூக வலைதளங்​களில் பரவிய பட்​டியலில் இடம் பெற்​றிருந்த வழக்​கறிஞர்​களின் 15-க்​கும் மேற்​பட்​டோர் விடு​முறை நாளான ஞாயிற்​றுக்​கிழமை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு அரசு வழக்​கறிஞர் அலு​வலக அதி​காரி​களைச் சந்​தித்​து, ‘தாங்​கள் அரசு வழக்​கறிஞர்​களாக நியமிக்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும், நாளை (ஜூன் 1) நீதி​மன்​றம் திறப்​ப​தால் இன்றே பொறுப்​பேற்​றுக் கொள்​வ​தாக​வும்’ தெரி​வித்​தனர்.

ஆனால், நியமனம் தொடர்​பாக அரசிடம் இருந்து அரசாணை எது​வும் வராத நிலை​யில் அரசு வழக்​கறிஞர்​களாக பொறுப்​பேற்க அனு​ம​திக்க முடி​யாது. அரசாணை வரட்​டும் பார்க்​கலாம் என அவர்​களிடம் அதி​காரிகள் தெரி​வித்​துள்​ளனர்.

இதையடுத்து ஏமாற்​றத்​துடன் திரும்​பிய வழக்​கறிஞர்​கள் நீதிப​தி​யைச் சந்​தித்​து, நாங்​கள் அரசு வழக்​கறிஞர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளோம், நாளை (ஜூன் 1) முதல் நீதி​மன்​றத்​தில் அரசு சார்​பில் ஆஜராக அனு​ம​திக்க வேண்​டும் என கோரிக்கை வைத்​துள்​ளனர். நீதிப​தி​யும் அரசாணை வராமல் அனு​ம​திக்க முடி​யாது எனக் கூறி​யுள்​ளார். இதனால் சமூக வலைதள பட்​டியலில் இடம் பெற்​றிருந்த வழக்​கறிஞர்​கள் ஏமாற்​றத்​துடன் திரும்​பினர்​.

மதுரை: அரசு வழக்கறிஞர்களாக பொறுப்பேற்க வந்தோருக்கு அனுமதி மறுப்பு
பள்ளிகளில் விரைவில் ‘உடற்கல்வி பிரிவு’ என்ற புதிய பாட திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in