எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்
எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழக நெடுஞ்​சாலைத் துறை​யில் நடை​பெறாத சாலைப் பணி​களுக்கு முன்னரே தொகையை விடு​வித்து கோடிக்​கணக்​கில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக பதி​யப்​பட்​டுள்ள வழக்​கில், திமுக முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு​வுக்கு லுக்​-அவுட் நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டது.

இதற்கு சென்னை உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்த நிலை​யில், அதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

இந்​நிலை​யில் தனக்கு எதி​ரான நெடுஞ்​சாலைத்​துறை முறை​கேடு தொடர்​பான வழக்கு மற்​றும் லுக்​-அவுட் நோட்​டீஸை ரத்து செய்​யக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் எ.வ.வேலு தாக்​கல் செய்​திருந்த மனுக்கள் மீதான விசா​ரணை நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது, இந்த வழக்​கில் லஞ்ச ஒழிப்​புத்​துறை தரப்​பில் பதில்​மனு தாக்​கல் செய்ய அவகாசம் வழங்க வேண்​டுமென மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்​யன் கோரிக்கை விடுத்​தார்.

எ.வ.வேலு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன், “ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின் அடிப்​படை​யில் மனு​தா​ரர், லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் முன்​பாக ஆஜராகி, விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு அளித்​துள்​ளார்.

எனவே லுக்​-அவுட் நோட்​டீஸை ரத்து செய்ய வேண்​டும்” எனக் கோரி​னார். லஞ்ச ஒழிப்​புத்​துறை தரப்​பில் விடுக்​கப்​பட்ட கோரிக்​கையை ஏற்​று, பதில்​மனு தாக்​கல் செய்ய ஆக.14 வரை அவகாசம் வழங்​கிய நீதிப​தி, இந்த வழக்​கில் எ.வ.வேலு​வுக்​கும் சம்​மன் அனுப்பி விசா​ரணையை தொடரலாம் என்​றும், அதே​நேரம் அவர் மீது எந்​தவொரு கடும் நடவடிக்​கைகளை​யும் எடுக்​கக்​கூ​டாது என ஏற்​கெனவே பிறப்​பித்த உத்​தரவை ஆக.14 வரை நீட்​டித்​தும் உத்​தர​விட்​டுள்​ளார்.

மேலும், எ.வ.வேலு​வுக்கு எதி​ரான லுக்​-அவுட் நோட்​டீஸை ரத்து செய்​துள்ள நீதிப​தி, ஒரு​வேளை அவர் வெளி​நாடு செல்​வ​தாக இருந்​தால் சம்​பந்​தப்​பட்ட நீதி​மன்​றத்​தில் முன்​அனு​மதி பெற்று செல்​லலாம் என உத்​தர​விட்​டுள்​ளார்.

இதற்​கிடையே இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி எ.வ.வேலு தரப்​பில் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு எதிர்ப்பு தெரி​வித்து அறப்​போர் இயக்​கம் தரப்​பில் இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அந்த மனுவை வி​சா​ரணைக்கு ஏற்ற நீதிப​தி, அதற்கு எ.வ.வேலு தரப்​பில் பதிலளிக்​க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​துள்​ளார்​.

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பதிலை திரும்பப் பெறவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in