மடப்புரம் அஜித் குமார் வழக்கை 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: விசாரணை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

மடப்புரம் அஜித் குமார் வழக்கை 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: விசாரணை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on: 
1 min read

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் காவல் மரணம் வழக்கை 9 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், நகைத் திருட்டு தொடர்பான புகாரில் தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்தார்.

சிபிஐ வழக்கை விசாரித்து 6 தனிப்படை காவலர்களை கைது செய்தது. மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் கூடுதல் குற்றப்பத்திரிகையில் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நாளில் டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், கைது நடவடிக்கையை ரத்து செய்யக்ககோரி 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்தும், அஜித் குமார் வழக்கை 9 மாதங்களில் விசாரித்து முடிக்கவும் நீதிபதி முருகன் இன்று உத்தரவிட்டார்.

மடப்புரம் அஜித் குமார் வழக்கை 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: விசாரணை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு; வெள்ளி மாற்றமின்றி விற்பனை

X