

மு.வீரபாண்டியன்
தாராபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தாராபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்த இடைத்தேர்தலில் நாங்கள் தெருவீதிகளில் மக்களை சந்திக்கிறோம்.
குக்கிராமங்களில் கூட 50, 60 வாகனங்களில் சென்று அரசியல் கட்சியினர் பேப்பர், பென்சில் வைத்து குறிப்பு எடுத்து போன் பே, கூகுள் பே வில் பணம் போடுவது எப்படி என்று கணக்கெடுக்கின்றனர். இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் முற்றிலும் தவறிவிட்டது.
இடைத்தேர்தலில் தெருக்களையே விலைபேசும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில், அமைச்சர்கள் பலர் இறங்கியிருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. இதே நிலையில் சென்றால் நாடாளுமன்ற ஜனநாயகம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார். திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.