“தவெக ஆட்சியை கவிழ்க்கும் சிந்தனை எங்களுக்கு இல்லை” - மு.வீரபாண்டியன்

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on
1 min read

செங்கல்பட்டு: “தவெக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற சிந்தனை கம்யூனிஸ்ட்டுகளுக்கு இல்லை. நாங்கள் அரசின் பக்கம் அல்ல; எப்போதும் உழைக்கும் மக்கள் பக்கம் இருப்பவர்கள். தவறு என்றால் விமர்சிப்போம், சரி என்றால் ஆதரிப்போம்,” என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி செய்தியாளர்களிடம் பேசிய மு.வீரபாண்டியன், “எங்கள் நூற்றாண்டு கால அரசியல் வாழ்வில் ஒருநாளும் நாங்கள் லஞ்சம் பெற்றதுமில்லை; லஞ்சத்தை வேடிக்கை பார்த்ததுமில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேரம் கிடைக்கிறபோது கம்யூனிஸ்ட்டுகள் வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும்.

படித்துப் பார்த்துவிட்டு கம்யூனிஸ்ட்டுகள் பற்றி முதல்வரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கரம்கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

தவெக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற சிந்தனை கம்யூனிஸ்ட்டுகளுக்கு இல்லை. நாங்கள் அரசின் பக்கம் அல்ல; எப்போதும் உழைக்கும் மக்கள் பக்கம் இருப்பவர்கள். தவறு என்றால் விமர்சிப்போம், சரி என்றால் ஆதரிப்போம்.

கடந்த (திமுக) ஆட்சியில் நடைபெற்ற தவறுகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டுமென கேட்கக்கூடாது. கடந்த ஆட்சியில் தொகுதி உடன்பாடு அவ்வளவுதான். 5 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் (தவெக) செய்யும் தவறுகளுக்கு நாங்களா பதில் சொல்ல வேண்டும்?

நாங்கள் அளித்த ஆதரவு ஜனநாயகத்துக்கானது. உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம் அவ்வளவுதான்.

அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் அறிவில் சிறந்தவர்கள். படித்தவர்கள். கம்யூனிஸ்ட்டுகள் மீது குற்றஞ்சாட்டும்போது கொஞ்சம் நிதானித்து சொல்லுங்கள். விமர்சனங்களை நாங்கள் ஏற்கிறோம், வரவேற்கிறோம்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
ரூ.1-க்கு இட்லி விற்கும் மூதாட்டிக்கு மீண்டும் இலவச சிலிண்டர்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in