அடுத்தடுத்து காவல் மரணங்கள்; காவல்துறையில் நிர்வாக சீரமைப்பு தேவை: மு.வீரபாண்டியன், சீமான் வலியுறுத்தல்

அடுத்தடுத்து காவல் மரணங்கள்; காவல்துறையில் நிர்வாக சீரமைப்பு தேவை: மு.வீரபாண்டியன், சீமான் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ‘காவல்​துறை நிர்​வாகத்தை முதல்​வர் சீரமைக்க வேண்​டும்’ என இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், நாம் தமிழர் கட்சிதலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் ஆகியோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

மு.வீர​பாண்​டியன்: கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் மாற்​றுத் திற​னாளி ஒரு​வர், காவல் துறை​யின​ரால் அடித்து கொல்​லப்​பட்ட அதிர்​வலைகள் அடங்​காத நிலை​யில், தூத்​துக்​குடி போலீ​ஸா​ரால் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட அருணாசலம் என்ற இளைஞரின் காவல் மரணம் நிகழ்ந்​திருப்​பது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது.

சாத்​தான்​குளத்​தில் காவல்​ துறை​யின​ரால் தந்​தை​யும், மகனும் கொல்​லப்​பட்ட வழக்​கின் தீர்ப்பு காவல்​துறை​யின் மனப்​போக்​கிலும், நடை​முறை​யிலும் எந்த தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​த​வில்லை என்​ப​தையே கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி சம்​பவங்​கள் வெளிப்​படுத்​துகின்​றன. காவல் மரணங்​களை முற்​றி​லு​மாக தடுக்​கும் வகை​யில் காவல்​துறை நிர்​வாகத்தை சீரமைக்க முதல்​வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

சீமான்: சிறைக்​குள் சபரிவர்​மன் எனும் சிறை​வாசி அடித்து கொல்​லப்​பட்ட சுவடுமறைவதற்​குள் அருணாச்​சலம் எனும் விசா​ரணை சிறை​வாசி காவல்​நிலை​யத்​தில் வைத்து அடித்து கொல்​லப்​பட்​டிருப்​பது மாநில அரசின் நிர்​வாகத் தோல்​வியையே காட்​டு​கிறது.

மூன்று மாதத்​தைக்​கூட நிறைவுசெய்​யாத தவெக ஆட்சியில் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்​துள்​ளன. எப்​பேர்ப்​பட்ட குற்​ற​வாளி​யாக இருந்​தா​லும் அரி​தான வழக்​கு​களுக்கே மரண தண்​டனை வழங்​கப்​படு​கிறது.

எந்த குற்​றமிழைத்​தவ​ரா​யினும் அவருக்​கான தண்​டனையை நீதி​மன்​றத்​தின் மூலமே பெற்​றுதர வேண்​டும். காவல்​துறை எதேச்​ச​தி​காரப் போக்​கோடு குற்​றம்​ சாட்​டப்​பட்​ட​வரின் மீது தாக்​குதல் நடத்​து​வதை ஒரு​நாளும் ஏற்க முடி​யாது.

காவல்​நிலை​யத்​தில் படு​கொலை செய்​யப்​பட்ட அருணாச்​சலம் மரணத்தை கொலை வழக்​காகப் பதிவுசெய்​து, அதில் தொடர்​புடைய குற்​ற​வாளி​களை விரைந்து கைது செய்ய வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள் தெரி வித்துள்ளனர்.

அடுத்தடுத்து காவல் மரணங்கள்; காவல்துறையில் நிர்வாக சீரமைப்பு தேவை: மு.வீரபாண்டியன், சீமான் வலியுறுத்தல்
மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: சட்டப்பேரவை தலைவரிடம் அமமுக மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in