எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

எம்.என்.ராஜம், எஸ்பி முத்துராமன்

எம்.என்.ராஜம், எஸ்பி முத்துராமன்

Updated on
1 min read

சென்னை: பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடந்த 2022-ல் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டில் வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கும், 2023-ல் கவிஞர் மு.மேத்தாவுக்கும், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி பின்னணிப் பாடகி சுசீலாவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான கலைத்துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜமும், 2025-ம் ஆண்டுக்கான விருதுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்பி.

முத்துராமனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ரொக்கப்பரிசாக தலா ரூ.10 லட்சமும், நினைவுப் பரிசும் வழங்கப்படும். இதற்கான விருது வழங்கும் விழா முதல்வர் தலைமையில் விரை வில் நடைபெற உள்ளது.

<div class="paragraphs"><p>எம்.என்.ராஜம், எஸ்பி முத்துராமன்</p></div>
“வளர்ந்த இந்தியா இலக்கை அடைய அறிவியல்-தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்” - ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in