அயனாவரம் தவெக பொதுக்கூட்டத்தில் மது பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு

அயனாவரம் தவெக பொதுக்கூட்டத்தில் மது பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு
Updated on
1 min read

சென்னை: அயனாவரத்தில் நேற்று நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் மது பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா, அயனாவரம் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் கொளத்தூர் வேட்பாளர் வி.எஸ்.பாபு, ஆயிரம் விளக்கு வேட்பாளர் ஜேசிடி.பிரபாகர், நாஞ்சில் சம்பத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெண் காயம்

இந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மது பாட்டில் கூட்டத்துக்கு நடுவே வீசப்பட்டது. இதில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த பெண் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உடனடியாக காவல்துறை விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வரை நான் இங்கிருந்து புறப்பட மாட்டேன் என ஆதவ் அர்ஜூனா மேடையில் பேசியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை மேற்கொண்டர். அப்போது சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அயனாவரம் தவெக பொதுக்கூட்டத்தில் மது பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு
1000 பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் 100% வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு: சென்னை மாநகராட்சி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in