குவாரி நடத்துவோரிடம் பசுமை நிதி வசூலிக்கும் சட்டத் திருத்தம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

மதுரை: தமிழகத்​தில் குவாரி நடத்​து​வோரிடம் பசுமை நிதி வசூலிக்​கும் சட்​டத் திருத்​தம் செல்​லும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர் சங்​கத்​தின் செய​லா​ளர் நாராயண பெரு​மாள்​சாமி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில், ‘தமிழ்​நாடு தொழிற்​துறை கடந்த 23.02.2022-ல் வெளி​யிட்ட அரசாணை மற்​றும் சிறு கனிம விதி​கள் திருத்​தம் ஆகியன ‘பசுமை நிதி’ என்ற பெயரில் குவாரி உரிமையாளர்​களிடம் கட்​டாய நிதி வசூல் செய்ய அனுமதிக்​கிறது. இதை ரத்து செய்து உத்​தர​விட வேண்​டும்’ எனக் கூறி​யிருந்​தார்.

இந்த மனு நீதிப​தி​கள் தண்​டபாணி, திலீப்​குமார் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. இருதரப்பு வாதங்​களை கேட்ட பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தரவு:

சட்​டத் திருத்​தம் மேற்​கொள்ள சிறு கனிமங்​கள் விதி​கள்-1959 பிரிவு​களின்​படி மாநில அரசுக்கு அதி​காரம் உள்​ளது. பசுமை நிதி​யைப் பயன்​படுத்தி குவாரியால் ஏற்​பட்ட பாதிப்​பு​களைச் சரி செய்ய அரசுக்கு அதி​காரம் உள்​ளது. சுற்​றுச்​சூழல் சமன்​பாட்​டைக் காப்​பாற்ற வேண்​டியுள்​ளது. மறு வாழ்​வளித்​தல், மீட்​டெடுத்​தல், மறு சீரமைப்பு என்ற விதி​களின் அடிப்​படை​யில் அரசு செயல்​பட வேண்​டியுள்​ளது.

எனவே, இதற்​கான பங்​களிப்பை வரியாகக் கருத வேண்​டிய அவ​சி​யம் இல்லை. அந்த நிதி கைவிடப்​பட்ட குவாரி​களைச் சீரமைக்க பயன்​படுத்​தப்​படும்.

மேலும் ஒவ்​வொரு மாவட்​டத்​திலும் பசுமை நிதி​யம் அமைக்க விதி வழிவகை செய்​கிறது. விதிப்​படி ஆட்சி​யர் தலை​மையில் ஒரு குழுவை அமைத்து மறு வாழ்​வளித்​தல், மீட்​டெடுத்​தல் மற்​றும் மறு சீரமைப்பு விதியை நடைமுறைப்​படுத்த வேண்​டும். சட்​டத்​திருத்​தம் சட்​டம் வழங்​கி​யுள்ள தொழில் உரிமையை மறுக்​க​வில்லை. மாறாக தொழில் செய்​வதற்கு சில நியாய​மான கட்​டுப்​பாடுகளை உரு​வாக்கி உள்​ளது.

ஏற்​கெனவே நடைமுறை​யில் உள்ள மாவட்ட கனிம நிதி​யத்​துக்​கும், இந்​தப் பசுமை நிதி​யத்​துக்​கும் வேறு​பாடு உள்​ளது. எனவே, சிறு கனிமங்​கள் விதி​கள், 1959-ல் செய்​யப்​பட்ட சட்​டத் திருத்​தப் பிரிவு​கள் 35-யு மற்​றும் 35-எச் ஆகியன செல்​லுபடி​யாகும். மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தரவில் கூறியுள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
இந்து அறநிலையத்துறையின் சிறப்பான ஏற்பாடுகளால் திருச்செந்தூரில் விமரிசையாக நடந்த சூரசம்ஹாரம்

X