38-வது நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா உட்பட ஏராளமானோர் அஞ்சலி
38-வது நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
Updated on
2 min read

சென்னை: எம்​ஜிஆரின் நினைவு தினத்​தையொட்டி மெரினா கடற்​கரை​யில் அமைந்​துள்ள அவரது நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் மற்​றும் வி.கே.சசிகலா உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர்.

தமிழக முன்​னாள் முதல்​வரும் அதி​முக நிறு​வனரு​மான எம்​ஜிஆரின் 38-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைந்​துள்ள அவரது நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நேற்று மலர் வளை​யம் வைத்து மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். அவருடன் அதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் கே.பி.​முனு​சாமி, முன்​னாள் அமைச்​சர்​கள் திண்​டுக்​கல் சீனி​வாசன், டி.ஜெயக்​கு​மார், எஸ்​.பி. வேலுமணி, வளர்​ம​தி, கோகுல இந்​தி​ரா, தம்​பிதுரை எம்​.பி. உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

தொடர்ந்து அங்கு அமைக்​கப்​பட்​டிருந்த மேடை​யில் திரண்​டிருந்த அதி​முக நிர்​வாகி​கள், தொண்​டர்​களு​டன் இணைந்​து, “பொய்​யான வாக்​குறு​தி​கள் தந்து ஆட்​சிக்கு வந்த திமுக ஆட்​சி​யில் நீட்​டுக்கு விலக்​கில்​லை. மக்​களின் கேள்வி​களுக்கு பதில் இல்​லை. எனவே போட்டோ ஷூட் நடத்​தும் முதல்​வரை வீட்​டுக்கு அனுப்​புவோம். எதிரி​களும், துரோகி​களும் தீட்​டும் திட்​டங்​கள் பலிக்​காது. இரட்டை இலையை தாங்​கும் தொண்​டர் படையோடு அதி​முக ஆட்​சியை அமைத்து கோட்​டை​யிலே கொடியேற்​று​வோம்” என உறு​தி​மொழி எடுத்​துக்​கொண்​டனர். பிறகு 2 நிமிடம் மவுன அஞ்​சலி செலுத்​தினர்.

இதே​போல் முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தனது ஆதர​வாளர்​களு​டன் வந்து மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். அப்​போது எம்​ஜிஆர் மக்​களுக்​காக செய்த பணி​களை​யும் நினைவு கூர்ந்​தார். அவரைத் தொடர்ந்​து, அமமுக துணை பொதுச்​செய​லா​ளர் செந்​தமிழன், வி.கே.சசிகலா ஆகியோர் தங்​களது ஆதர​வாளர்​களு​டன் மரி​யாதை செலுத்​தினர்.

தமிழக பாஜக மூத்த தலை​வர் தமிழிசை, தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் திரு​நாவுக்​கரசு உள்​ளிட்​டோரும் அங்கு மரி​யாதை செலுத்​தினர். எம்​ஜிஆர் நினைவு தினத்​தையொட்டி அப்பகுதியில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்​தும் வேன்​கள், பேருந்​துகள் மூலம் ஆயிரக்​கணக்​கான தொண்​டர்கள் வந்து நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​தினர். மேலும் கட்​சித் தலை​வர்​கள் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தமிழக அரசி​யல்வரலாற்​றின் பொற்​கால அத்​தி​யா​யம் எம்​ஜிஆர். அண்​ணா​வின் வழிமறந்து தமிழகத்தை ஒரு குடும்​பம் தன் கொள்​ளைக்​கா​டாக மாற்ற துடித்​த​போது, அதி​முகவை தொடங்கி அண்​ணா வின் விழு​மி​யங்​களை காத்​தவர். அவரின் புகழை ஏந்தி நிற்​கும் நாம், திமுக​வின் ஆட்​சிக்கு மக்​கள் துணை​யோடு முடிவுரை எழுத உறு​தி​யேற்​போம்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: தன்​னுடைய திட்​டங்​களால் பசியை பொசுக்​கி, கல்​வி, சுகா​தா​ரத்​தில் மாபெரும் புரட்சி செய்​தவர் எம்​ஜிஆர். அவரது புகழ் காலம் கடந்​தும் மங்​காது.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தமிழகத்​தின் வளர்ச்​சிக்​காக தன் வாழ்​நாளை அர்ப்​பணித்​து தமிழகத்தை தன்​னிறைவு​பெற்ற மாநில​மாக மாற்​றிக்​ காட்​டிய எம்​ஜிஆரின்​ பாதை​யில்​ எந்​நாளும்​ பயணிக்​கஉறுதியேற்​போம்​.

38-வது நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
திட்டக்குடி அருகே கார்கள் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து: 9 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in