ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை பேச்சு: தவெக எம்எல்ஏவுக்கு தலைவர்கள் கண்டனம்

ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை பேச்சு: தவெக எம்எல்ஏவுக்கு தலைவர்கள் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் நேற்று முன்​தினம் சோழ​வந்​தான் தவெக எம்​எல்ஏ கருப்​பை​யா, இளைஞர்​களை சீரழிக்​கும் ஜல்​லிக்​கட்டு என்று பேசி​யது சர்ச்​சைக்​குள்​ளாகி​யுள்​ளது. இதற்கு அதி​முக, அமமுக உள்பட பல்​வேறு கட்சி தலைவர்கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இது குறித்​து, சமூக வலை ​தளப் பக்​கத்​தில் அதி​முக வெளி​யிட்ட பதிவு: தமிழரின் பாரம்​பரிய​மான ஜல்​லிக்​கட்டு விளை​யாட்​டைப்பற்றி சட்​டப்​பேர​வை​யில் ஆளும்​ கட்சி தவெக சட்​டப்​பேரவை உறுப்​பினர் கருப்​பையா இழி​வாகப் பேசி​யிருப்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது. ஜல்​லிக்​கட்​டுக்கு உலகப்​பு​கழ் பெற்ற அலங்​காநல்​லூரை தனது தொகு​தி​யில் வைத்​துள்ள ஒரு சட்​டப்​பேரவை உறுப்​பினர் இப்​படி பேசி​யிருப்​பது மிகுந்த அதிர்ச்​சி​யை​யும், பல சந்​தேகங்​களை​யும் ஏற்​படுத்​துகிறது.

சங்க காலம் தொட்டே தமிழர்​களுக்​கும் மாடு​களுக்​கு​மான உறவைப் பறை​சாற்​றும் இந்த ஏறு தழு​வுதல் பற்றி புரிதல் இல்​லாமலா இந்த தொகு​தி​யின் சட்​டப்​பேரவை உறுப்​பினர் இருப்​பார்? மாணவர்​கள், இளைஞர்​கள் தன்​னெழுச்​சி​யாக திரண்டு நடத்​திய வரலாற்​றுப்​புரட்சி விளை​வாக, அன்​றைய அதி​முக அரசு, மத்​திய அரசிடம் வலி​யுறுத்​திப் பெற்ற உரிமை​யை, மிக​வும் கீழ்த்​தர​மாக பேசி​யுள்ள சட்​டப்​பேரவை உறுப்​பினரின் இந்த பேச்சு ஏன் அவைக்​குறிப்​பில் இருந்து நீக்​கப்​பட​வில்​லை?

ஜல்​லிக்​கட்​டுக்கு தடை கொண்டு வரவேண்​டும் என இன்​றைய பொய்க்​கால் குதிரை அரசு நினைத்​து, அதற்​கான முதல் பார்​வை​யாக தனது எம்​எல்​ஏ-வை பேச வைத்​துள்​ளாரா முதல்​வர் என்ற சந்​தேகம் தமிழக மக்​களுக்கு எழுகிறது. தனது எம்​எல்ஏ பேசிய பேச்​சுக்கு முதல்​வர் மன்​னிப்பு கேட்க வேண்​டும். ஜல்​லிக்​கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்​பாட்டை அறிவிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அம்மா மக்​கள் முன்​னேற்​றக் கழக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: வீர விளை​யாட்​டான ஜல்​லிக்​கட்டு போட்​டிகள் இளைஞர் சமு​தா​யத்​தைச் சீரழிக்​கின்றன என்ற சோழ​வந்​தான் சட்​டப்​பேரவை உறுப்​பினர் கருப்​பை​யா​வின் பேச்சு கடும் கண்​டனத்துக்​குரியது.

சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களைத் தக்​க​வைத்​துக் கொள்ள மக்​கள் வரிப் பணத்​திலிருந்தே கார் வழங்​கலாம் என்று முடி​வெடுத்த தவெக, அதனை தனது 2 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களை வைத்தே எப்​படி அவை​யில் முன் மொழிந்​ததோ அதே​போல ஜல்​லிக்​கட்டு விளை​யாட்​டுக்கு உலக அளவில் புகழ்​பெற்ற அலங்​காநல்​லூரை உள்​ளடக்​கிய சோழ​வந்​தான் தொகு​தி​யின்சட்​டப்​பேரவை உறுப்​பினரை வைத்தே இத்​தகைய இழி​வான பேச்​சைச் சட்​டப்​பேர​வை​யில் பதிவு செய்​திருப்​ப​தன் மூலம், வருங்​காலத்​தில் ஜல்​லிக்​கட்டு போட்​டிகளுக்​குத் தடை விதிக்க தவெக அரசு முயல்​கிற​தா?

ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து: ஜல்​லிக்​கட்டு என்​பதுதமிழர்​களின் தொன்​மை​யான பண்​பாட்​டோடும், கிராமிய வாழ்​வியலோடும் பின்​னிப் பிணைந்த ஒரு பாரம்​பரிய நிகழ்​வாகும். தமிழர்​களின் உணர்​வு​களைப் புரிந்​து​கொண்​டு, கருத்​துகளை பொறுப்​புட​னும், நிதானத்​துட​னும் தெரிவிக்க வேண்​டியது மக்​கள் பிர​தி​நி​தி​களின் கடமை.

கருப்பையா விளக்கம்: இதுகுறித்​து, கருப்​பையா எம்​எல்ஏ அளித்​துள்ள விளக்​கத்​தில், ‘‘இளைஞர் சமு​தா​யத்தை நல்​வழிப்​படுத்த வேண்​டும், ஒரு கூண்​டுக்​குள் அடைக்​கக்​கூ​டாது என்ற நல்​லெண்​ணத்​துடன் தான் கூறினேனே தவிர, தவறான உள்​நோக்​கம் கிடை​யாது” என்று தெரி​வித்​துள்​ளார்.

ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை பேச்சு: தவெக எம்எல்ஏவுக்கு தலைவர்கள் கண்டனம்
பெரியார், அம்பேத்கருக்கு விஜய் அரசால் மிகப் பெரிய அவமரியாதை: திமுக காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in