23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்ப வழக்கறிஞர்கள் முடிவு

23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்ப வழக்கறிஞர்கள் முடிவு
Updated on
1 min read

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீண்ட கால​மாக காலி​யாக உள்ள 23 நீதிபதி பணி​யிடங்​களை சமூக நீதி அடிப்​படை​யில் விரை​வில் நிரப்ப வேண்​டும் என வழக்​கறிஞர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞரும், தமிழ்​நாடு - புதுச்​சேரி பார் கவுன்​சில் உறுப்​பினரு​மான எம்​.வேல்​முரு​கன் உள்​ளிட்ட வழக்​கறிஞர்​கள் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நாடு முழு​வதும் 300-க்​கும் மேற்​பட்ட நீதிபதி பணி​யிடங்​கள் நீண்ட கால​மாக நிரப்​பப்​ப​டா​மல் காலி​யாக உள்​ளன.

சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் அனு​ம​திக்​கப்​பட்ட மொத்த நீதிபதி பணி​யிடங்​கள் 75. ஆனால், 52 பேர் மட்​டுமே பணி​யில் உள்​ளனர்.

எஞ்​சிய 23 பணி​யிடங்​கள், அதாவது மூன்​றில் ஒருபங்கு இடங்கள் நீண்ட கால​மாக காலி​யாக உள்​ளன. மேலும், தற்​போது மூத்த நீதிப​தி​யாக உள்ள ஆர்​.சுரேஷ்கு​மார் மே மாதத்​துடன் ஓய்வு பெற உள்​ளார்.

பணிச்சுமை அதிகரிப்பு

இந்தச் சூழலில், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் புதிய நீதிப​தி​களை நியமிக்க ஏற்​கெனவே 24 பேர் கொண்ட பட்​டியல் உச்ச நீதி​மன்​றத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டும், இது​வரை பரிசீலிக்​கப்​பட​வில்​லை.

இதனால், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​களின் தேக்​கம் அதி​கரித்து நீதிப​தி​களுக்கு பணிச் சுமை அதி​கரித்​துள்​ளது.

வழக்​கு​களை மீண்​டும் பட்​டியலுக்கு கொண்​டுவர முடி​யாமல் வழக்கறிஞர்கள் சிரமத்​துக்கு ஆளாகின்​றனர். இதனால் வழக்​காடிகள் வேதனையடைந்​து, நீதித் துறை மீதான நம்​பிக்​கையை இழக்​கின்​றனர்.

கோரிக்கை மனு

பணி​யில் உள்ள நீதிப​தி​கள் எப்​போது ஓய்வு பெறு​வார்​கள் என்​பது முன்​கூட்​டியே தெரி​யும் நிலை​யில், அதை கணக்​கிட்டு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் காலி​யாக உள்ள 23 நீதிப​தி​கள் பணி​யிடங்​களை​யும் சமூக நீதி​யின் அடிப்​படை​யில் விரை​வாக நிரப்ப உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யும், மத்​திய சட்ட அமைச்​சக​மும், குடியரசுத் தலை​வரும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இதுதொடர்​பாக அனைத்து வழக்​கறிஞர்​களும் கையெழுத்​திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலை​வருக்கு அனுப்​பப்​பட உள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்ப வழக்கறிஞர்கள் முடிவு
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in