காணொலி விசாரணையின்போது பெண் வழக்கறிஞரிடம் அத்துமீறல்: வழக்கறிஞர் மீதான வழக்கு ரத்து

காணொலி விசாரணையின்போது பெண் வழக்கறிஞரிடம் அத்துமீறல்: வழக்கறிஞர் மீதான வழக்கு ரத்து
Updated on: 
1 min read

சென்னை: கரோனா கால​கட்​டத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் காணொலி வாயி​லாக வழக்கு விசா​ரணை நடை​பெற்​றது. அப்​போது, விசா​ரணைக்கு ஆஜரான வழக்​கறிஞர் சந்​தானகிருஷ்​ணன் தனது ஜூனியர் பெண் வழக்​கறிஞரிடம் தகாத முறை​யில் நடந்​து​கொண்ட வீடியோ காட்​சிகள் நேரலை​யில் ஒளிபரப்​பாகின. இந்த காட்​சிகள் வலை​தளங்​களி​லும் பர​வின. இதையடுத்து, சந்​தானகிருஷ்ணனுக்கு எதிராக நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்கு தொடரப்​பட்​டது. அவர் கைது செய்​யப்​பட்டு, பின்​னர் ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார்.

இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அவர் மனு தாக்​கல் செய்​தார். நீதிபதி எம்.நிர்​மல்​குமார் முன்பு இந்த மனு விசா​ரணைக்கு வந்தது. மனுதா​ரர் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்க (எம்​எச்​ஏஏ) தலை​வர் பால்​க​னக​ராஜ் ஆஜராகி வாதிட்​டார்.

இதையடுத்து நீதிபதி, “சம்​பந்​தப்​பட்ட வழக்​கறிஞரின் நடத்​தைக்​காக தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் ஒழுங்கு நட​வடிக்கை எடுத்​துள்​ளது. நீதி​மன்ற அவமதிப்பு வழக்​கிலும் அவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். இந்த வழக்​கின் இறுதி அறிக்​கை​யில் உரிய ஆதா​ரங்​கள் சமர்ப்​பி்க்​கப்​பட​வில்லை” என்று கூறி, சந்தானகிருஷ்ணனுக்கு எதிரான அவ​மதிப்பு வழக்கை ரத்து செய்து உத்​தர​விட்​டுள்​ளார்.

காணொலி விசாரணையின்போது பெண் வழக்கறிஞரிடம் அத்துமீறல்: வழக்கறிஞர் மீதான வழக்கு ரத்து
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்

X