“சட்டமும் சமூகமும் நெருங்கிய தொடர்புடையவை” - நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து

மதுரையில் நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் எழுதிய ‘நீதிபதி பார்வைகள்: வாழ்க்கை, சட்டம் மற்றும் இலக்கியம்’  என்ற நூலை உயர் நீதிமன்ற நீதிபதிஎல்.விக்டோரியா கௌரி வெளியிட, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா பெற்றுக்கொண்டார். உடன், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு  படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரையில் நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் எழுதிய ‘நீதிபதி பார்வைகள்: வாழ்க்கை, சட்டம் மற்றும் இலக்கியம்’ என்ற நூலை உயர் நீதிமன்ற நீதிபதி

எல்.விக்டோரியா கௌரி வெளியிட, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா பெற்றுக்கொண்டார். உடன், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Updated on
1 min read

மதுரை: சட்​ட​மும், சமூக​மும் நெருங்​கிய தொடர்புடையவை. சட்​டத்​திலிருந்து சமூகம் பிரிந்து செயல்​பட​வோ, சமூகத்​திலிருந்து சட்​டத்தை புறந்​தள்​ளவோ முடி​யாது என்று உயர் நீதி​மன்ற நீதிபதி என்​.ஆன்ந்த் வெங்​கடேஷ் கூறி​னார்.

இந்​திய வழக்​கறிஞர்​கள் சங்​கம், நியூ செஞ்​சுரி புத்தக நிறு​வனம் சார்​பில், உயர் நீதி​மன்ற நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் எழு​திய ‘நீ​திப​தி​யின் பார்​வை​கள்: வாழ்க்​கை, சட்​டம் மற்​றும் இலக்​கி​யம்’ எனும் நூல் வெளி​யீட்டு விழா மதுரை கலைஞர் நூற்​றாண்டு நூல​கத்​தில் நடை​பெற்​றது. பட்​டிமன்ற நடு​வர் சாலமன் பாப்​பையா தலைமை வகித்​தார். இந்​திய வழக்​கறிஞர்​கள் சங்க மாநிலத் தலை​வர் கு.​சாமிதுரை வரவேற்​றார்.

உயர் நீதி​மன்ற நீதிபதி எல்​.விக்​டோரியா கௌரி நூலை வெளியிட, சாலமன் பாப்​பை​யா, முன்​னாள் அரசு தலை​மைச் செய​லா​ளர் வெ.இறையன்பு, எம்எம்​பிஏ தலை​வர் ஐசக் மோகன்​லால் ஆகியோர் பெற்​றுக் கொண்​டனர். விழா​வில் நீதிபதி எல்​.விக்​டோரியா கௌரி பேசும்​போது, “இலக்​கி​யத்​தில் சிறந்த நகரம்என்ற பெயர் சங்கத் தமிழ் வளர்த்த மதுரைக்குத்தான் பொருந்​தும்.

இந்த நூலில், சட்​டச் சிக்​கல்​கள், இலக்​கியம், உளவியல், ஆன்​மிகம், இசை உள்​ளிட்டபல்​வேறு தலைப்​பு​களில்50 கட்​டுரைகளை நீதிபதி தொகுத்​துள்​ளார். நுண்​ணிய மவுனமே இசை​யாக அமை​யும் என்று மேல்​ நாட்டு இசை அறிஞர்​கள் குறிப்​பிடு​வது​போல, வாழ்க்கை இசையோடு இயைந்​தது​தான். நாம் இசை சூழ்ந்த வாழ்க்​கையைவாழ்ந்து கொண்​டிருக்​கிறோம்” என்​றார்.

நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் பேசி​ய​தாவது: நீதிப​தி​களும் சாதாரண மனிதர்​கள்​தான். அவர்​கள் சமு​தா​யத்​தில் பார்த்ததை, படித்​ததை வெளிப்​படுத்த ஒரு வெளி தேவை. அந்த வெளி​தான் இந்​தப் புத்​தகம். நீதிப​தி​யின் இறு​மாப்​பு, பதவி, அதி​காரம் இப்​புத்​தகத்​தில் எட்டிப் பார்க்​க​வில்​லை. சட்​ட​மும், சமூக​மும் மிக நெருங்​கிய தொடர்புைடயவை.

சட்​டத்​திலிருந்து சமூகம் பிரிந்து செயல்​பட​வோ, சமூகத்​திலிருந்து சட்​டத்​தைப் புறந்​தள்​ளவோ முடி​யாது. இந்த கட்​டுரை​யில் இலக்​கிய நயத்தை தேடாதீர்​கள். ஆனால், இதில் ஒரு மனிதனின் இதயம் துடித்​துக் கொண்​டிருக்​கிறது. எழுத்து எனக்​குள் ஏற்​படுத்​திய ரசவாத மாற்​றம்​தான் இந்​தப் புத்​தகம்.

இந்​தப் புத்​தகம் சமூகத்​தில் மாற்​றத்தை ஏற்​படுத்​துமா என்று தெரி​யாது. கரித் துண்​டில் ஏற்​படும் மாற்​றம்​தான் வைர​மாகிறது. இவ்​வாறு அவர் பேசி​னார். நியூ செஞ்​சுரி புத்தக நிறுவன விற்​பனை மேலா​ளர் கிருஷ்ண​மூர்த்தி நன்றி கூறி​னார்.

<div class="paragraphs"><p>மதுரையில் நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் எழுதிய ‘நீதிபதி பார்வைகள்: வாழ்க்கை, சட்டம் மற்றும் இலக்கியம்’  என்ற நூலை உயர் நீதிமன்ற நீதிபதி</p><p>எல்.விக்டோரியா கௌரி வெளியிட, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா பெற்றுக்கொண்டார். உடன், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு  படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி</p></div>
“மிகப் பெரிய தோல்வியை பாஜகவும், அதிமுகவும் அடையப் போகிறது” - முதல்வர் ஸ்டாலின் சூளுரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in