அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய பணியாளர்கள், கணினிகள் இல்லை!

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய பணியாளர்கள், கணினிகள் இல்லை!
Updated on
1 min read

சிவகங்கை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய பணியாளர்கள், கணினிகள் இல்லாததால், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் செப்டம்பரில் முழுமையாக செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உடல்நலம் பாதிப்பால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளி​கள், ஒவ்​வொரு முறை​யும் ஏற்​கெனவே பெற்ற சிகிச்சை விவரங்​களைத் தெரிவிக்க வேண்​டி​யுள்​ளது. பெரும்​பாலானோர் அந்தந்த நேரங்களில் ஏற்​பட்ட பாதிப்​புக்கு மட்​டுமே சிகிச்சை பெறு​வ​தால், தேவை​யில்​லாத பக்​க​விளைவு​கள் ஏற்படுகின்​றன.

இதைத் தவிர்க்க, மத்​திய அரசு ஆயுஷ்​மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டதை செயல்​படுத்தி​யுள்ளது. இந்த திட்​டத்​தில் இணைய விரும்​புவோர் www.abha.abdm.gov.in என்ற வலை​தளத்​தில் பதிவு செய்​து, 14 எண் கொண்ட அடை​யாள அட்டையை (ஆபா) பதி​விறக்​கம் செய்ய வேண்​டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்​து​வ​மனை​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களி​லும் பதிவு செய்து தரு​கின்​றனர். தங்​களது செல்​போன் மூல​மாக​வும் பதிந்து​கொள்ள முடி​யும்.

மேலும், சிகிச்​சைக்கு செல்வோர் இந்த அட்​டையை கொண்​டு​சென்​றால் போதுமானது. அதில் நோய், பரிசோதனை, சிகிச்சை உள்​ளிட்ட விவரங்​கள் பதிவேற்​றம் செய்​யப்​படும். இதன்மூலம், எந்த ஊரில் வேண்​டு​மா​னாலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடி​யும். ஏற்​கெனவே சிகிச்சை பெற்ற ஆவணங்​களை எடுத்​துச் செல்​லத் தேவை​யில்​லை.

மேலும் ‘ஆபா’ அட்​டை​யுடன் மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்ட அட்​டைகளும் இணைக்​கப்​படும். இதனால் காப்பீடு அடிப்​படை​யில், நாட்​டில் உள்ள அங்​கீகரிக்​கப்​பட்ட எந்த மருத்​து​வ​மனை​யிலும் இலவச​மாக சிகிச்சை பெற முடி​யும். இத்திட்​டத்தில் தமிழக சுகா​தா​ரத் துறை தீவிரம் காட்டாமல் இருந்தது. இதனால், பலரும் ஆபா அட்டை பெறவில்லை. தற்போது, இத்திட்டத்தை செப்டம்பர் மாதத்திலிருந்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இங்கு தினமும் பல ஆயிரம் பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கான மருந்துகள் மட்டுமின்றி ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் மற்றும் இதர ஆய்வக முடிவுகளையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு போதிய கணினிகள், பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை செய்யாததால், ஆயுஷ்​மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தினால், ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்காக ஒவ்வொரு துறைக்கும் கூடுதல் பணியாளர் கள் நியமிக்கப்படுவ தோடு, கணினிகளையும் வழங்க வேண்டும். இல்லையெனில், நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேட்ட போது, ’நோயாளிகளுக்கு ஆபா அட்டைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. போதிய கணினி வசதிகளும் கேட்டுள்ளோம்’ என்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய பணியாளர்கள், கணினிகள் இல்லை!
“பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவது தமிழக வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளிவிடும்” - மு.க.ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in