டபுள் இன்ஜின் மாநிலங்களில் வேகமான வளர்ச்சி: எல்.முருகன் பெருமிதம்

பாஜக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடமிருந்து கருத்து கேட்பதற்காக, தனித்தனி பிரச்சார வாகனத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பார்வையாளர் அரவிந்த் மேனன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர். | படம்: ம.பிரபு |

பாஜக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடமிருந்து கருத்து கேட்பதற்காக, தனித்தனி பிரச்சார வாகனத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பார்வையாளர் அரவிந்த் மேனன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர். | படம்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: டபுள் இன்ஜின் அரசு இருக்​கும் மாநிலங்​களில் வேக​மான வளர்ச்சி அடைவ​தாக மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி பாஜக​வின் தேர்​தல் அறிக்​கையை தயாரிப்​ப​தற்​காக மக்​களிடம் இருந்து கருத்து கேட்​கும் இயக்​கத்தை மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் நேற்று தொடங்கி வைத்​தார்.

தொடர்ந்​து, மக்​களிடம் இருந்து கருத்​துகளைப் பெறு​வதற்​காக, 38 மாவட்​டங்​களுக்​கும் பிரச்​சார வாக​னத்தை கொடியசைத்து தொடங்கி வைத்​தார். மேலும், பொது​மக்​கள் தங்​களது கருத்​துகளை அளிப்​ப​தற்​கான விண்​ணப்​பங்​களை பெறு​வதற்கு 7878786060 என்ற செல்​போன் எண் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

இந்த எண்​ணில் பொது​மக்​கள் மிஸ்டு கால் கொடுத்​தால், அந்த எண்​ணுக்கு வரும் லிங்க்கை கிளிக் செய்​து, விண்​ணப்​பப்​படிவத்தை பெற்​று, அதை பூர்த்தி செய்து தேர்​தல் அறிக்கை குழு​விடம் அளிக்​கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் எல்​.​முரு​கன் பேசி​ய​தாவது: கடந்த 2021-ல் முதல்​வர் ஸ்டா​லின் கொடுத்த தேர்​தல் அறிக்​கை​யில் இடம் பெற்​றிருந்த 500 வாக்​குறு​தி​களில் 90 சதவீதம் நிறைவேற்​ற​வில்​லை. மக்​களை ஏமாற்​றுகிற தேர்​தல் அறிக்​கையை தயாரிப்​பது திமுக. மக்​களுக்​காக மக்​கள் கொடுக்​கின்ற அறிக்​கையை நிறைவேற்றி கொடுப்​பது பிரதமர் மோடி.

டபுள் இன்ஜின் அரசு எங்​கெல்​லாம் இருக்​கிறதோ, அந்த மாநிலங்​கள் எல்​லாம் வேக​மான வளர்ச்சி அடைந்து கொண்​டிருக்​கின்​றன. தென் மாநிலத்​தில் முதல்​முறை​யாக திரு​வனந்​த​புரம் மாநக​ராட்​சி​யைக் கைப்​பற்​றி​யிருக்​கிறோம். அடுத்து சென்னை மாநக​ராட்​சி​யைக் கைப்​பற்​று​வோம்.

தேர்​தலில் வெற்றி பெறு​வோம் என்ற நம்​பிக்கை திமுக​வுக்கு இல்​லை. மது​ராந்​தகத்​தில் நடை​பெற்ற தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் பிரம்​மாண்ட மாநாட்டை பார்த்து திமுக​வினருக்கு காய்ச்​சல் வந்​து​விட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் பேசும்​போது, ‘மக்​களை மறந்​து​விட்​டு, குடும்​பத்​தின் நலனுக்​காக மட்​டுமே இன்று திமுக ஆட்சி நடத்திக் கொண்​டிருக்​கிறது. தனது மகன் உதயநி​தியை முதல்​வ​ராக்​கு​வதற்​கு, தனது கட்​சிக்​காரர்​களை அடக்​கவே ஸ்டா​லின் இரும்​புக் கரத்தை பயன்​படுத்தி கொண்​டிருக்​கிறார். திமுக ஆட்​சிக்கு முடிவு கால​மும், தமிழகத்​துக்கு விடிவு கால​மும் வந்​து​விட்​டது” என்​றார்.

இந்​நிகழ்ச்​சி​யில், பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா, மாநில துணைத் தலை​வர்​கள் கரு.​நாக​ராஜன், டால்​பின் ஸ்ரீதர், தேர்​தல் அறிக்கை குழு​வில் இடம் பெற்​றுள்ள அர்​ஜுனமூர்த்​தி, ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் பலர் கலந்து கொண்​டனர்.

<div class="paragraphs"><p>பாஜக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடமிருந்து கருத்து கேட்பதற்காக, தனித்தனி பிரச்சார வாகனத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பார்வையாளர் அரவிந்த் மேனன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர். | <em>படம்: ம.பிரபு</em> |</p></div>
புரட்சி தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in