அறுவடை நெருங்கி​யும் வராத குறுவை தொகுப்பு நிதி: டெல்டா விவசாயிகள் கவலை

2 மாதங்​களுக்கு முன் அரசாணை வெளி​யானது
அறுவடை நெருங்கி​யும் வராத குறுவை தொகுப்பு நிதி: டெல்டா விவசாயிகள் கவலை
Updated on
1 min read

தஞ்சாவூர்: குறுவை தொகுப்பு நிதிக்​கான அரசாணை வெளி​யிடப்​பட்டு 2 மாதங்​களாகி​யும் இன்​னும் வழங்​கப்படாததால் டெல்டா விவ​சா​யிகள் கவலை​யடைந்​துள்​ளனர்.

தமிழகத்​தில் ஒவ்​வொரு ஆண்​டும் நெல் சாகுபடியை ஊக்​குவிக்​கும் வகை​யில், குறு​வை, சம்பா சிறப்பு தொகுப்பு திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த திட்​டத்​தின் கீழ் உர மானி​யம், இடு​பொருட்​கள், ரொக்​கம் ஆகியவை வழங்​கப்​படு​வது வழக்​கம்.

இந்​நிலை​யில் இந்​தாண்டு தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்​டத்தை அறி​வித்​தது. இதற்​காக ரூ.134.83 கோடி நிதியை ஒதுக்​கீடு செய்​தது. குறுவை தொகுப்பு திட்​டத்​தின் கீழ் பயன்​பெற வேண்​டு​மா​னால், விவ​சா​யிகள் வரிசை நடவு செய்​திருக்க வேண்​டும், ஒரு குடும்​பத்​தில் ஒரு​வருக்கு மட்​டும், அதி​கபட்​ச​மாக 2 ஏக்​கர் வரை ஏக்​கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி விவ​சா​யிகளும் இயந்​திரம் மூலம் நடவு செய்​ததற்​கான ரசீது, கிராம நிர்​வாக அலு​வலரிடம் அடங்​கல், கணினி சிட்டா உள்​ளிட்ட பல்​வேறு ஆவணங்​களு​டன் அந்​தந்த வட்​டார வேளாண்மை உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில் விண்​ணப்​பித்​தனர். இந்த திட்​டத்​துக்கு நிதியை ஒதுக்​கீடு செய்து கடந்த 12.6.2026 அன்று தமிழக அரசு அரசாணை​யும் வெளி​யிட்​டது.

இதற்​கிடையே, குறுவை சாகுபடி செய்த விவ​சா​யிகள் அடுத்த மாதம் முதல் அறு​வடையைத் தொடங்க உள்​ளனர். ஆனால் குறுவை தொகுப்பு நிதியை இன்​னும் வழங்​காத​தால் விவ​சா​யிகள் அதிருப்​தி​யடைந்​துள்​ளனர். இதுகுறித்து காவிரி உரிமை விவ​சா​யிகள் செயற்​பாட்​டாளர் வெ.ஜீவக்​கு​மார் கூறும்​போது, “குறுவை தொகுப்பு திட்​டம் ஜூன் மாதம் அறிவிக்​கப்​பட்​டு,அரசாணை​யும் வெளி​யிடப்​பட்​டது.

குறுவை தொகுப்பு திட்​டத்​துக்​கான நிதியை விவ​சா​யிகளுக்கு வழங்கி விட்​ட​தாக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் தெரி​வித்​தார். ஆனால், இது​வரை விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கில் இந்த திட்​டத்​துக்​கான நிதி வரவு வைக்​கப்​பட​வில்​லை. குறுவை சாகுபடி​யும் முடிந்து இன்​னும் ஒரு மாதத்​தில் அறு​வடை தொடங்கி விடும். ஆனால் நிதி மட்​டும் இது​வரை வரவில்​லை. எனவே நிதியை உடனே விடுவிக்க வேண்​டும்” என்​றார்.

இதுகுறித்து வேளாண்மை துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “குறுவை தொகுப்பு திட்​டத்​தில் விவ​சா​யிகளிட​மிருந்து பெறப்​பட்ட விண்​ணப்​பங்​கள் பரிசீலிக்​கப்​பட்டு வரு​கின்​றன. விரை​வில்​ அதற்​கான நிதி வங்​கி மூலம்​ வரவு வைக்​கப்​படும்​” என்​றனர்​.

அறுவடை நெருங்கி​யும் வராத குறுவை தொகுப்பு நிதி: டெல்டா விவசாயிகள் கவலை
தொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் பல்டியா? - முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in