

கேபிஒய் பாலா | கோப்புப் படம்.
புதுச்சேரி: தவெகவில் இணைய திட்டமா என்ற கேள்விக்கு நடிகர் கேபிஒய் பாலா பதிலளித்துள்ளார்.
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ‘தேடல் சேவகன்’ என்ற அமைப்புக்கு இலவச ஆம்புலன்ஸை இன்று நடிகர் கேபிஒய் பாலா வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், "இந்த ஆம்புலன்ஸை பயன்படுத்த பணம் எதுவும் கிடையாது. மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “உதவுவதற்கு எந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை. சம்பாதிப்பதை சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே என்னிடமுள்ளது . கடைசி வரைக்கும் சம்பாதிப்பதை மக்கள் சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.
விஜய் கட்சியில் இணைய திட்டமா என்று கேட்டதற்கு, “அரசியல் நோக்கம் ஏதுமில்லை. கடைசிவரை சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.