மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலி: கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலி: கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
Updated on
1 min read

கோவில்பட்டி: மூலப்​பொருட்​கள் விலை உயர்வு காரண​மாக கடலை மிட்​டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த உற்​பத்​தி​யாளர்​கள் முடி​வெடுத்​துள்​ளனர்.

கோவில்​பட்டி கடலைமிட்​டாய்​கள் உலகப் பிரசித்தி பெற்​ற​தாகும். இந்த கடலை மிட்​டாய்​கள் சிங்​கப்​பூர், மலேசி​யா, இலங்​கை, மாலத்​தீவு உள்​ளிட்ட நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன. இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு புவி​சார் குறி​யீடு வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், கோவில்​பட்டி கடலைமிட்​டாய் உற்​பத்​தி​யாளர்​கள் மற்றும் விற்​பனை​யாளர்​கள் ஆலோ​சனை கூட்​டம் நடந்​தது. இதுகுறித்​து, சங்​கச் செய​லா​ளர் கண்​ணன் கூறிய​தாவது: நிலக்​கடலை, வெல்​லம், ஏலக்​காய் ஆகிய​வற்​றின் விலை உயர்ந்​துள்​ளது. பேக்​கிங் கவர்​களின் விலை​யும் அதி​கரித்​துள்​ளது. 80 கிலோ நிலக்​கடலை மூட்டை கடந்த 3 மாதங்​களுக்கு முன்பு ரூ.9,680 என விற்​பனை​யானது.

தற்​போது ரூ.12,500-க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. ரூ.1,300 என இருந்த 30 கிலோ கொண்ட ஒரு சிப்​பம் வெல்​லம் விலை தற்​போது ரூ.2,600 ஆக விலை உயர்ந்​துள்​ளது.

ஏலக்​காய் கிலோ ரூ.2,200-ல் இருந்து ரூ.3,600 என உயர்ந்​துள்​ளது. இந்த விலை உயர்வு கடலை மிட்​டாய் தயாரிப்​ப​தையே கேள்விக்​குறி​யாக்கி உள்​ளது. எனவே மூலப் பொருட்​களின் விலை ஏற்​றத்தை சமாளிக்க, கடலை மிட்​டாய் விலை​யை, தற்​போதைய விலை​யி​லிருந்து 25 சதவீதம் உயர்த்​து​வது என முடி​வெடுத்​துள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலி: கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
வெற்றி நோட்புக் முதல் வெற்றி உப்பு வரை: தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட 23 அறிவிப்புகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in