கோடநாடு வழக்கு விசாரணை செப்​.16-க்கு தள்ளிவைப்பு

கோடநாடு எஸ்டேட் | கோப்புப்படம்.
கோடநாடு எஸ்டேட் | கோப்புப்படம்.
Updated on
1 min read

ஊட்டி: நீல​கிரி மாவட்​டம் கோட​நாடு பகு​தி​யில் உள்ள தேயிலை எஸ்​டேட்​டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்​ரல் 23-ம் தேதி, காவலா​ளியை கொலை செய்த ஒரு கும்​பல், பங்​களா​வில் இருந்த சில ஆவணங்​களை கொள்​ளை​யடித்து சென்​றது. இது தொடர்​பாக சயான் உள்பட பத்து பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்​கின் விசா​ரணை ஊட்டி ஒருங்​கிணைந்த நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது, சிபிசிஐடி ஏடிஎஸ்பி முரு​கவேல் தலை​மையி​லான சிபிசிஐடி போலீ​ஸாரும், குற்​ற​வாளி​கள் தரப்​பில் சயான், உதயகு​மார் ஆகியோ​ரும் ஆஜராகினர். வழக்கு விசா​ரணை​யின் தற்​போதைய நிலை குறித்து நீதிபதி முரளிதரன் கேட்​டறிந்​தார். அப்​போது, அரசு தரப்பு வழக்​கறிஞர் காமேஸ்​வரன் விசா​ரணை நிலை குறித்து தெரி​வித்​தார். இதைத்​தொடர்ந்​து, விசா​ரணையை வரும் செப்​டம்​பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோடநாடு எஸ்டேட் | கோப்புப்படம்.
“இளைஞர்களின் நலனுக்காக தேர்வு முறைகளில் சீர்திருத்தங்கள்...” - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in