கோடநாடு வழக்கு ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

கோடநாடு வழக்கு ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Updated on
1 min read

ஊட்டி: கோடநாடு வழக்கு விசா​ரணை ஜூன் 19-க்கு தள்​ளி​வைத்து நீதிபதி உத்​தர​விட்​டார். நீல​கிரி மாவட்​டம் கோட​நாடு எஸ்​டேட்​டில் 2017- ஏப்​ரலில் காவலாளி கொலை செய்​யப்​பட்​டு, பொருட்​கள் கொள்ளை​யடிக்​கப்​பட்​டன.

இதுதொடர்​பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசா​ரித்து வருகிறது. இந்த வழக்கு உதகை நீதி​மன்​றத்​தில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அரசு தரப்​பில், செல்​போன் உரை​யாடல் மற்​றும்தகவல் பரி​மாற்​றங்​கள் குறித்து குஜ​ராத்​தில் உள்ள பிஎஸ்​என்​எல் அலு​வல​கத்​தில் இருந்து அறிக்கை கேட்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் அந்த தகவல்​கள் இன்​னும் கிடைக்​காத​தால், விசா​ரணைக்கு கால அவகாசம் கோரப்​பட்​டது.

ஆனால் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் தரப்​பில் அவகாசம் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரி​விக்கப்பட்டது. இருதரப்பு வாதங்​களை கேட்ட நீதிபதி எம்​.செந்​தில்​கு​மார்​ வழக்​கு வி​சா​ரணையை ஜூன்​ 19-க்​குதள்​ளி​வைத்​தார்.

கோடநாடு வழக்கு ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கலாம்: போக்குவரத்துத் துறை முன்னாள் செயலர் பணிந்திர ரெட்டி கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in