

சென்னை: தவெக தோற்ற பிறகு கட்சியே காலாவதியாகிவிடும் என்று திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் காசிமுத்துமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: “மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் கட்சிப் பதவியில் இருந்து விலகுகிறேன்” என்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. தவெக தோற்ற பிறகு கட்சியே காலாவதி ஆகிவிடும்.
அப்போது ராஜினாமா செய்தால் என்ன. செய்யாவிட்டால் என்ன. தேர்தலில் தவெக தோற்றால், திமுகவில் இருந்து விசிகவுக்கு, விசிகவில் இருந்து தவெகவுக்கு சென்றதுபோல, தவெகவில் இருந்து விலகி வேறு கட்சிக்குச் செல்வார்.
தாராபுரத்தில் தவெக ரூ.1,000 கொடுக்க ஆரம்பித்ததே, தவெகவின் தோல்வியின் தொடக்கம். ஆளுங்கட்சிக்கு சத்யபாமா, மரகதம் குமரவேல் வந்ததே தொகுதிக்கு நன்மை செய்யத்தான் என்கிறார்கள்.
ஆளும் கட்சியில் சேர்ந்தால்தான் தொகுதிக்கு நன்மை செய்ய முடியும் என்றால் தவெக கூட்டணிக் கட்சிகளான முஸ்லிம்லீக், மதிமுக, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து பின்னர் மத்தியில் ஆளும் பாஜகவில் சேர்ந்து மீண்டும் தேர்தலை சந்திப்பார்களா.
சட்டப்பேரவை வரலாற்றில் வெற்றி பெற்ற 13 நாளில் ராஜினாமா செய்தது அதிமுகவினர்தான். மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக வெல்வது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.