

சென்னை: ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் அமைப்புப் பொதுச் செயலாளராக கரு.நாகராஜனை நியமனம் செய்து இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வீ த லீடர்ஸ் அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு கரு.நாகராஜனை இயக்கத்தின் பொதுச் செயலாளராக நியமிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது அமைப்பின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு மாநிலம் முழுவதும் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், நிர்வாகிகளுக்கும் களப்பணியாளர்களுக்கும் இடையே சிறந்த பொறுப்புகளை அமைப்புப் பொதுச் செயலாளர் என்ற முறையில் கரு. நாகராஜன் முன்னெடுத்து செல்வார்.
அவரது அரசியல் அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்புகளின் மூலம் நமது வீ த லீடர்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்தி, மக்கள் மத்தியில் நமது அமைப்பின் செயல்பாடுகளை விரிவாகக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், நமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் அமைப்புப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கரு. நாகராஜனுக்கு நமது அமைப்பின் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களும் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.