‘மேகேதாட்டு பிரச்சினைக்கு கர்நாடக அரசு தாமாக முன் வந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ - ஜி.கே.வாசன் கருத்து

ஜி.கே.வாசன் |கோப்புப் படம்

ஜி.கே.வாசன் |கோப்புப் படம்

Updated on: 
1 min read

பெரம்பலூர்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திரித்துப் பேசாமல், மேகேதாட்டு அணை கட்டும் பிரச்சினைக்கு கர்நாடக அரசு தானே முன்வந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர் கதையாக உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ, பெண் ஆட்சியருக்கு குறுந்தகவல் அனுப்பிய விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், சந்தேகங்களுக்கு ஆளுங்கட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழந்த விவகாரத்தில், தேவையற்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, சர்ச்சையோ வேண்டாம்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திரித்துப் பேசாமல், அணை கட்டும் முயற்சிக்கு கர்நாடக அரசு தாமாக முன்வந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது இரு மாநில விவசாயிகளுக்கும் நன்மை அளிப்பதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>ஜி.கே.வாசன் |கோப்புப் படம்</p></div>
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்

X