

அதிமுக மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் வாக்கு சேகரித்த வேட்பாளர் கணிதா சம்பத். உடன் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்எல்ஏ தன்சிங் உள்ளிட்டோர்.
மதுராந்தகம்: தர்மத்துக்கும் அதர்மத்துக்கு இடையே போட்டி நடப்பதாகக் கூறி மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் பிரச்சாரம் செய்தார்.
அவரை ஆதரித்து, சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதன்படி தொன்னாடு, நீலமங்கலம், மேல்வசலை, கீழ்வசலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்எல்ஏ தன்சிங், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரச்சாரத்தின்போது கணிதா சம்பத், 2011-16 காலகட்டத்தில் எம்எல்ஏவாக இருந்தபோது செயல்படுத்திய திட்டங்ககளை எடுத்துக் கூறி வாக்கு கோரினார்.
மேலும், “இந்தத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான தேர்தல். தர்மம் வெற்றி பெற வேண்டும். துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் தங்களது வாக்குகள் மூலம் தக்க பாடம் புகட்ட வேண்டும்” எனக் கூறினார்.