தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள்: கனிமொழி எம்.பி., டிடிவி தினகரன் கண்டனம்

காவல்துறையும் ஓய்வில் உள்ளதா என கேள்வி
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள்: கனிமொழி எம்.பி., டிடிவி தினகரன் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: தமி​ழ​கத்​தில் கடந்த 24 மணிநேரத்​தில் 8 கொலை​கள் நடந்​துள்​ளன. முதல்​வரைப் போல் காவல்​துறை​யும் ஓய்​வில் உள்​ளதா என திமுக எம்​.பி. கனி​மொழி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் தளப் பதி​வில், ‘‘கடந்த 24 மணிநேரத்​தில் தமி​ழ​கத்​தில் 8 கொலை​கள் நடந்​துள்​ள​தாக செய்​தி​கள் வெளிவந்​துள்​ளன. தமி​ழ​கத்​தில் சட்​டம் ஒழுங்கு முற்​றி​லும் செயலி ழந்து விட்​டது என்​பதற்கு இந்​தக் கொலை​கள்​தான் சாட்​சி.

தமி​ழ​கத்​தின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்​து​வார்​கள் என நம்பி வாக்​களித்த மக்​களுக்கு, தின​மும் குற்ற விகிதத்தை உயர்த்​திக் கொண்​டிருக்​கிறது தவெக அரசு. தமி​ழ​கத்​தில் மக்களின் பாது​காப்பு அன்​றாடம் கேள்விக்​குறி​யாகிக் கொண்​டிருக்​கும் ​போது, அரசு என்ன செய்​து​ கொண்​டிருக்​கிறது? தமி​ழ​கத்​தில் காவல்​துறை செயல்​படு​கிற​தா? இல்லை அது​வும் முதல்​வரைப் போல் ஓய்​வில்​தான் இருக்​கிற​தா?’’ என தெரி​வித்​துள்​ளார்.

இதே​போல், அமமுக பொதுச்செய​லா​ளர் டிடிவி தினகரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: கிருஷ்ணகிரி அருகே டாஸ்​மாக் பார் உரிமை​யாள​ரால் இளைஞர் ஒரு​வர் கல்​லால் அடித்​துக் கொலை, மதுரை ஜெய்​ஹிந்த் புரத்​தில் காவல் நிலை​யம் அரு​கிலேயே சரவணன் என்ற நபர் வெட்​டிக் கொலை, மதுரை மேலூர் அரசுப் பள்ளி அருகே செல்​லத்​துரை என்ற இளைஞர் கொலை, சென்னை புறநகர் குன்​றத்​தூர் அருகே தண்​டலத்​தில் ஆட்டோ ஓட்​டுநர் கொலை, தாம்​பரத்​தில் வெல்​டர் கொலை, கரூரில் இறந்த நிலையில் கண்​டெடுக்​கப்​பட்​டுள்ள சிறுமி​யின் உடல் என ஒரே நாளில் தமி​ழ​கத்தில் 8 படு​கொலைச் சம்​பவங்​கள் நடந்துள்ளது அதிர்ச்​சியை ஏற்​படுத்​துகின்​றன.

காவல்​துறையைத் தனது கட்​டுப்​பாட்​டில் வைத்​துள்ள முதல்​வர் விஜய்க்​கு, மாநிலத்​தின் சட்​டம் ஒழுங்கு எவ்​வளவு முக்​கி​யம் என்​பது புரி​கிற​தா? எனவே, தமி​ழ​கத்​தில் தின​மும்அரங்​கேறும் குற்​றச் சம்​பவங்​களை தடுக்க ஆக்​கப்​பூர்வ நடவடிக்​கையை மேற்​கொள்​வதோடு, இந்த கொலைச் சம்​பவங்களில் தொடர்​புடைய குற்​ற​வாளி​களை விரைந்து கைது செய்​து, கடுமை​யான தண்​டனை பெற்​றுத் தரவேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள்: கனிமொழி எம்.பி., டிடிவி தினகரன் கண்டனம்
“முதல்வர் விஜய்யின் ஆணவத்துக்கு பாடம் புகட்டும் வாய்ப்பே இடைத்தேர்தல்...” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in