“அதிமுக இன்னும் கொஞ்சநாள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கவலை” - கனிமொழி எம்.பி

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் திமுக மகளிர் மாநாடு நடைபெறவுள்ள இடத்தை நேற்று பார்வையிட்ட எம்.பி. கனிமொழி.

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் திமுக மகளிர் மாநாடு நடைபெறவுள்ள இடத்தை நேற்று பார்வையிட்ட எம்.பி. கனிமொழி.

Updated on
1 min read

தஞ்சாவூர்: இன்னும் கொஞ்சநாள் அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான் தங்களது கவலையாக இருப்பதாக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் வரும் 26-ம் தேதி, திமுக மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டு ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்த எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியது: மேற்கு மண்டலத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் மகளிர் அணி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அந்த மாநாடு, பெண்களின் ஆதரவு யார் பக்கம் இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்து சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்தது. தமிழகம் முழுவதும் பெண்கள் திமுகவை சார்ந்து இருக்கிறார்கள்.

அவர்கள் மறுபடியும் திமுக வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை எடுத்து சொல்லக்கூடிய மாநாடாக, தஞ்சாவூரில் நடைபெறும் மாநாடு நிச்சயமாக அமையும். சுமார் 1.25 லட்சம் மகளிருக்கு மேல் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை. சில அறிவிப்புகளை தான் வெளியிட்டு இருக்கிறது. அதிமுக ஏற்கெனவே திட்டமாக அறிவித்ததை, அவர்கள் செயல்படுத்த மறந்துவிட்டார்கள்.

பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை, பிரதமரை அழைத்து ஒரு திட்டமாக அறிவித்தார்கள். அதை யாருக்கும் கொடுக்காததால், அதை மறந்து விட்டு, மறுபடியும் தேர்தல் அறிவிப்பாக வெளியிட்டுள்ளனர். எனவே, அதுகுறித்து கருத்து சொல்ல ஒன்றும் இல்லை.

அதிமுக தங்களுக்கு உடன்பாடு இல்லாதவர்களுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினால், எப்படி வெற்றி பெற முடியும். அதிமுக என்ற கட்சி இன்னும் கொஞ்சம் நாளாவது பத்திரமாக இருக்க வேண்டும் என்று தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு உள்ளோம். எங்களது கவலையும் அதுவாகத்தான் உள்ளது.

தேர்தல் வருவதால் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது எம்.பி. முரசொலி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், பூண்டி கலைவாணன், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

<div class="paragraphs"><p>தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் திமுக மகளிர் மாநாடு நடைபெறவுள்ள இடத்தை நேற்று பார்வையிட்ட எம்.பி. கனிமொழி.</p></div>
கவிஞர் வைரமுத்து வரவேற்பு நிகழ்வில் காலணி வீச்சு - நடந்தது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in