

கனிமொழி எம்.பி
சென்னை: அம்பேத்கர் அயலக கல்வி உதவித் தொகையை தமிழக அரசு நிறுத்திவிட்டது என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ், மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள உயர் கல்வி நிலையங்களில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித் தொகையை வழங்காமல், அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு.
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக, இதையும் திட்டமிட்டு மறைமுகமாக செயலிழக்கச் செய்து நிறுத்துவதுதான் இந்த அரசின் நோக்கமா? உடனடியாக நிலுவையிலுள்ள உதவித் தொகையை விடுவித்து, மாணவர்களின் கல்வியை தடையின்றி தொடரச் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.