ஜனநாயக உரிமைகள், தமிழக நலனை காக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: தாராபுரம் வாக்காளர்களுக்கு கனிமொழி அழைப்பு

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக கோவிந்தாபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி  பிரச்சாரம் செய்தார்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக கோவிந்தாபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பிரச்சாரம் செய்தார்.

Updated on: 
1 min read

தாராபுரம்: ஜன​நாயக உரிமை​களை​யும் தமிழகத்​தின் நலன்​களை​யும் பாது​காக்​கும் வகை​யில், திமுக வேட்​பாள​ருக்கு மக்​கள் ஆதரவு அளிக்க வேண்​டும் என்று தாராபுரத்​தில் திமுக சார்​பில் நடை​பெற்ற தேர்​தல் பிர​சா​ரக் கூட்​டத்​தில் அக்​கட்​சி​யின் துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி. வலி​யுறுத்​தி​னார்.

இக்​கூட்​டத்​தில் மேலும் அவர் பேசி​ய​தாவது: மக்​களிடம் வாக்​கு​களைப் பெற்று ஆட்சிப் பொறுப்​புக்கு வருபவர்​கள் அளித்த வாக்​குறு​தி​களை நேர்​மை​யாக நிறைவேற்ற வேண்​டும். தேர்​தல் காலங்​களில் மட்​டும் பொது​மக்​களை அணுகி வாக்கு கேட்​ப​தை விட, அவர்​களின் உரிமை​களையும் தேவை​களை​யும் தொடர்ந்து பாது​காப்​பதே அரசி​யல் கட்​சிகளின் கடமை.

திமுக ஆட்​சி​யில் மக்​கள் நலனுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்​டது. தேசிய அளவில் விலை​வாசி உயர்வு 4.4 சதவீத​மாக இருந்​தது. தமிழகத்​தில் ஏற்​பட்​டுள்ள விலை உயர்​வால் பொது​மக்​கள் கடுமை​யாக பாதித்​துள்​ளனர். மத்​திய அரசின் மக்​கள் நலனுக்கு எதி​ரான நடவடிக்​கைகள் தொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வரு​கிறது. பிரதமர் அல்​லது உள்​துறை அமைச்​சர் உள்​ளிட்ட மத்​திய அரசின் முக்​கிய பொறுப்​பு​களில் இருப்​பவர்​களின் முடிவு​களாக இருந்​தா​லும், தமிழகத்​தின் நலனுக்கு பாதிப்பு என்றால் திமுக எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது.

தேர்​தல் ஆணை​யத்​தின் செயல்​பாடு​கள் மற்​றும் வாக்​காளர் பட்​டியல் தயாரிப்பு தொடர்​பாக பல்​வேறு குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்டு வரு​கின்றன. கோடிக்​கணக்​கான வாக்​காளர்​களின் பெயர்​கள் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளன. இந்த விவ​காரம் குறித்து தலை​வர்​கள் போராடி வரும் சூழலில் தவெக தலை​வர் விஜய் கேள்வி எழுப்​பாதது ஏன்?

தமிழகத்​தில் தவெக​வுக்கு ஆதரவளித்த கம்​யூனிஸ்ட் கட்​சிகள் தற்​போது இடைத்​தேர்​தலில் எதிரணி​யில் இருப்​பது ஏன், சமூக வலை​தளங்​களில் திமுகவைச் சேர்ந்த பெண்​கள் குறித்து தவெக​வினர் அவதூறாகப் பேசுவது குறித்து விஜய் கண்​டனம் தெரி​வித்​துள்​ளா​ரா, தமிழகத்​தின் உரிமை​கள், மாநில நலன்​கள் மற்​றும் ஜனநாயகத்​தைப் பாது​காப்​ப​தற்​காக திமுக​வுக்கு வாக்​களிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இதேபோல் தாராபுரம் அருகே மானூர்பாளையம் என்ற இடத்தில் பேசிய அவர் தொடர்ந்து, கோவிந்தாபுரம், மணக்​கடவுகிளாங்​குண்​டல் உள்​ளிட்ட தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்​. இக்கூட்டங்களில் திமுக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் மற்​றும் பொது​மக்​கள் பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக கோவிந்தாபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி  பிரச்சாரம் செய்தார். </p></div>
எல் நினோ தாக்கம் எதிரொலி: இந்திய அணைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் சரிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in