

வி.புருஷோத்துமன்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன், கட்சிப் பதவியை ராஜினாமா செய் துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிபெற வாய்ப்பில்லாத தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘கட்சித்தலைமை, தமாகா கட்சியின் வளர்ச்சிக்கான எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
மேலும், நடைபெறவுள்ள தேர்தலில் கட்சியின் தனித்துவத்தைப் பேணாமல், பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட ஜி.கே.வாசன் எடுத்துள்ள முடிவு தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.