அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு: பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யிடம் அழைப்பிதழ் வழங்கினார் கலாநிதி மாறன்

அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு: பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யிடம் அழைப்பிதழ் வழங்கினார் கலாநிதி மாறன்
Updated on: 
1 min read

சென்னை: இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தர், தொழில​திபர் காவ்யா கலாநிதி மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்​சிக்கு வரு​மாறு, பிரதமர் நரேந்​திர மோடி, தமிழக முதல்​வர் விஜய்க்கு நேரில் அழைப்​பிதழ் வழங்​கப்​பட்​டுள்​ளது.

சன் குழும தலை​வர் கலாநிதி மாறனின் மகளும் ஹைத​ரா​பாத் சன்​ரைசர்ஸ் கிரிக்​கெட் அணி​யின் நிர்​வாக பொறுப்​பாள​ரு​மான காவ்யா கலாநிதி மாறனுக்​கும் இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தருக்​கும் திரு​மணம் நிச்​ச​யிக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​கள் திரு​மணம் கிரீஸ் நாட்​டில் நவ. 11-ம் தேதி நடை​பெற இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இந்த திரு​மணத்​தில் முன்​னணி திரைபிரபலங்​கள் மற்​றும் இரு குடும்​பத்​தா​ரின் நெருங்​கிய உறவினர்​கள், நண்​பர்​கள் மட்​டும் கலந்​து​கொள்​கின்​றனர். இவர்​களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்​னை​யில் நவம்பர் 21-ம் தேதி நடை​பெற இருக்​கிறது.

இதற்​காக பிரபலங்​களைச் சந்​தித்து திருமண வரவேற்பு அழைப்​பிதழை சன் குழு​மத் தலை​வர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் வழங்கி வரு​கின்​றனர். தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டியை சந்​தித்து நேற்று முன் தினம் அழைப்​பிதழை வழங்​கினர்.

இந்​நிலை​யில் பிரதமர் நரேந்​திர மோடியை டெல்​லி​யில் சந்​தித்த, கலாநிதி மாறன் திருமண வரவேற்​புக்​கான அழைப்​பிதழை வழங்​கி​னார். காவேரி கலாநிதி மாறன், அனிருத்​தின் தந்தை ரவிச்​சந்​தர், அவரது மனைவி லட்​சுமி ஆகியோர் உடனிருந்​தனர். இதே போல் சென்​னை​யில் நேற்று முன்தினம் தமிழக முதல்​வர் விஜய்யை சந்​தித்​தும் திருமண வரவேற்​புக்​கான அழைப்​பிதழை கலாநிதி மாறன் வழங்​கி​னார். காவேரி கலாநிதி மாறன், அனிருத் ஆகியோர் உடன் இருந்​தனர். அவர்​களுக்​கு முதல்​வர்​ விஜய்​ வாழ்த்​து தெரிவித்​தார்​.

அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு: பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யிடம் அழைப்பிதழ் வழங்கினார் கலாநிதி மாறன்
சிறார்கள் இணையத்தை பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in